மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்களிடம் அனுதாபம் தேட விமல் வீரவங்ச முயற்சி: மனோ கணேசன்
தனது மனைவியின் குற்றச்செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடுவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப விமல் வீரவங்ச முயற்சிக்கின்றார் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில்…
