மின்சாரம் தாக்கி பச்சிளம் குழந்தை பலி
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று…
