Headlines

ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் பார்த்த 3 மூத்த நீதிபதிகளின் பதவி பறிபோனது: ஒருவர் ராஜினாமா

அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து பணி நேரத்தில் இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த 3 மூத்த நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட் உயர் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில் அலுவலக இண்டர்நெட் கணக்கை உபயோகித்து தங்களது பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்தவாறு இணையதளம் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்த மாவட்ட நீதிபதி டிமோத்தி பவுலெஸ், குடியுரிமைத்துறை நீதிபதி வாரென் கிராண்ட், மாவட்ட துணை நீதிபதி மற்றும்…

Read More

சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (VK)

Read More

மேர்வின் சில்வா மரத்தில் கட்டி வைத்த சம்பவம்.. முறைப்பாடு செய்யபட்டது, ஆப்பு தயார்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக, பொலிஸ் தலைமை காரியாலயத்தில் பேராசிரியர் தினேஷ் கே. குணசேகரவினால், நேற்று குற்றவியல் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சமூர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More

பள்ளிவாசலின் நிர்மானப்பணிகளுக்கு 100 சீமெந்து பக்கட்டுக்கள் அமைச்சர் சஜித் வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டிய யக்கஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்ட அருன’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்காக 100 சீமெந்து பக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது. இந் நிகழ்வின்போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பினர்கள், பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் ;கலந்து கொண்டார்.

Read More

துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு அழைப்பாணை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிக்கா டி லிவேரா தென்னக்கோன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவை சுட்டுக்கொலை செய்தமை உட்பட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கெதிராக சட்ட மா அதிபர்…

Read More

சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்!

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சிரிய உள்நாட்டுப் போரைக் கண்காணித்து வரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. எனினும், இத்தகவலை முற்றாக மறுத்துள்ள சிரிய இராணுவத் தரப்பு இட்லிப் மாகாணத்திலுள்ள…

Read More

சுவிட்ஸர்லாந்து- இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை இதுவே முதற்தடவையாகும். டிடீயர் புர்கால்ட்டர் கடந்த ஆண்டு சுவீட்ஸர்லாந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய தேர்தல் முறைமையை உடனடியாக அமுல்படுத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்த உடனேயே அந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவது ஜனநாயகமாகாது. புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ஒராண்டு காலமேனும் தேவைப்படும். புதிய தேர்தல் முறைமை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டால் அது குறித்து ஆராய்வதற்கு குறைந்த பட்சம் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். புதிய தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை அமுல்படுத்த எமது திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்படும்…

Read More

தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை! – மைத்திரி

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தடை செய்ய சிவில் நிர்வாக, கல்வித்துறை, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது. இது அரசியலமைப்பு உரிமையாகும். இதை தடை செய்வது சட்ட விரோதமாகும். இந்த சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமுலாகும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு சபையிலும் இதுபற்றி அறிவிப்பேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள்…

Read More

ஒளிந்திருந்து வாய்ச்சவடால் விடாமல் தேர்தலில் நேருக்கு நேர் மோத வாருங்கள்; ரணில் சவால்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தோற்கடிக்க முயற்சித்து  மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் அவர்களை சுற்றியுள்ள வாய்ச் சவடால்  பேசுபவர்களும் ஒவ்வொரு இடமாக ஒளிந்து மறைந்து சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், பொதுத் தேர்தலொன்றில் தற்போதைய அரசாங்கத்துடன் நேருக்கு நேர் போட்டிக்கு வருமாறு சவால் விடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்தச் சவாலை விடுத்தார்.  அவர் இங்கு மேலும்  பேசுகையில்…

Read More

மேலதிகமாக 1000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள உத்தேசம்

அடுத்த வருடம் முதல் மேலதிகமாக ஆயிரம் மாணவர்களை பல்கலைகழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அதற்கமைய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார். புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More