இஸ்ரேலிய ஐஸ் கரீம் உற்பத்திகளை மிதிக்கும் பாலஸ்தீன இளைஞர்கள்
Abusheik Muhammed ரமல்லாவில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய மக்களின் ஐஸ்க்ரீம் உணவுப்பொருட்களை தூக்கி வீசி காலில் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்..
Abusheik Muhammed ரமல்லாவில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய மக்களின் ஐஸ்க்ரீம் உணவுப்பொருட்களை தூக்கி வீசி காலில் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்..
அஸ்ரப் ஏ சமத் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரங்களை இலவசமாக பகிர்ந்தளித்தனர். இந் நிகழ்வு இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இரா ஜேசப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகையில் நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு 25 பேருக்கு லெப் டொப், மேலும் 10 புகைப்படக்கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் மற்றும் பேக்கள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன….
2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம்…
தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. -தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி- தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு…
மலேசிய எதிர்க்கட்சி எம்.பி.யும், முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராகிமின் மகளுமான நுருல் இசாவை மலேசிய போலீசார் கைது செய்தனர். அவருக்கு வயது 34. கடந்த வாரம், தனது தந்தைக்கு எதிரான அப்பீல் கோர்ட்டின் தீர்ப்பை பாராளுமன்றத்தில் விமர்சித்து பேசியதற்காக தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பாராளுமன்றத்தின் உரிமையில் குறுக்கிடும் செயல் என்று அவருடைய வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை முற்றாக தடைசெய்யவுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவைகளும் காணப்படவில்லை என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் அதிகளவிலான பணத்தை செலவிட்டு, வெளிநாடுகளில் இருந்து அளவுக்கதிகமாக அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் உள்நாட்டு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நன்மைக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.
ஏ.எச்.ஏ.ஹுஸைன் எதிர்வரும் அரசியல் சூழல் இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்துக்கும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு அநேக இழப்புக்களை தருகின்ற ஒன்றாக அமையலாம் என்று சமூர்த்தி அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தி கல்வி வலயத்திலுள்ள அமீரலி வித்தியாலய வருடாந்த மெய்வல்லுநர் போட்டி, திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ், அவசரமான ஒரு தேர்தல் அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றபோது, அது…
தற்போது பேசப்படும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமானது அல்ல எனவும், அது அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு நிறுவனம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெரண தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவன்காட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த…
ஏ.எஸ்.எம்.ஜாவித் கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளீர் கல்லூரியின் சிறுவர் விளையாட்டு விழா கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தை கூரோ விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் கலாநிதி ஜஹர்ஜான் மன்சூர் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் கௌரவ அதிதிகளாக வீ கெயா கியுமனிற்றி தலைவர் பிரின்சஸ் மரியா அமொர், ஹமீட் அல்-ஹூஸைனியா கல்லூரி அதிபர் ரி.எம். நசுமுதீன், முன்னாள் கல்விப் பகுதி பணிப்பாளர் சறூக்கான், பாடசாலையின்…
நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் உள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கால்கள் இரண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தெமட்டகொடை – சிறிதம்ம மாவத்தையில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட மனிதக் கால்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸாரினால் விரிவு படுத்தப்பட்டுள்ளன. அந்த கால்கள் காணப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை வைத்து பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல்களை மறைக்கும் குற்றச்சாட்டுக்காக அவரை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. கடந்த சனிக்கிழமை தெமட்டகொடை –…
தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோநிலை இருந்ததில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்…