Headlines

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட வீதிகள் திறந்து வைப்பு

மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட மார்கட் வீதி மற்றும் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ஆகியன ஆரம்பித்து திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் நேற்று 12.02.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனும், விஷேட அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். மேலும், அநுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், குருணாகல்…

Read More

பிடித்ததில் வலித்தது….

நண்பா இது ஒரு “கதையல்ல நிஜம்”…! என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து பேசினாங்க… “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…!!! என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் …? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , “போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”…? நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை…

Read More

A/L பரீட்சையில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க தீர்மானம்

க. பொ. த. உயர்தரத்தில் சித்தியடைந்த 50,000 மாணவர்களை ஆசிரியர் உதவியாளர்களாக நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக வேண்டியே ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 35 ஆகும். பின்தங்கிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தார். வேலையில்லாப்…

Read More

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுமார் 500 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read More

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நிறைவு

காணாமற்போனோர் தொடர்பில் வட மாகாணத்தில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி!

ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்துள்ளார் என பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க, சுனாமி உதவி திட்ட மோசடியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின்…

Read More

கிளிநொச்சிக்கு புதிய நீதவான் நியமனம்

– சுப்பிரமணியம் பாஸ்கரன் – கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று திங்கட்கிழமை (18) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.  2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நீதவானாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வந்த ஏ.ஜே.பிரபாகரன்,  இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே, புதிய நீதவானாக ஏ.ஏ.ஆனந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நீதவானாக கடமையாற்றிய இவர், புலமைப்பரிசில் பெற்று, மேலதிக படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கல்விகற்று அண்மையில் நாடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மடலஸ்ஸ இளைஞர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெக்குனுகொல்ல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைப்பாளருமான எம்.சி.இர்பானின் ஏற்பாட்டில் மடலஸ்ஸ இளைஞர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது . இந்த சந்திப்பில்  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.                              

Read More

புதிய அரசியலமைப்பு :பாராளுமன்றில் விவாதம் ;09 திருத்தங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா். பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா். நேற்று…

Read More

ஜாகிர் நாயக்கிற்கு எதிரான மத்திய அரசின் வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்

சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகப் புகழ்பெற்ற இந்திய இஸ்லாமிய பரப்புரையாளர் மருத்துவர். ஜாகிர் நாயக்கை களங்கப்படுத்தியும், தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தியும் மத்திய அரசு வெளியிட்டு வரும் அவதூறுகளுக்கு எதிராக எமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். மும்பையைச் சேர்ந்த மருத்துவரும், இஸ்லாமிய அறிஞருமான ஜாகிர் நாயக், இஸ்லாமிய மார்க்கத்தை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களின் வேத நூற்களையும், கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றவர். சமயக் கோட்பாடுகளுக்கு இடையே இருக்கும் ஒருமைப்பாட்டை, நுண்மான் நுழைபுலத்தோடு…

Read More

போதைப்பொருளை முற்றாக அகற்றுவது தொடர்பில் தீர்மானம்

-நாச்சியாதீவு பர்வீன் – மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்,அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். மட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த…

Read More