Headlines

காலி ஜிந்தோட்டை அடாவடித்தனத்தை கட்டுப்படுத்துங்கள் பொலிஸ்மா அதிபர், அமைச்சர் வஜிரவிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை

காலி ஜிந்தோட்டை பகுதியில் இன்று மாலை (17) மீண்டும் ஏற்பட்டிருக்கும்  வன்முறைச்சம்பவங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கைவிடுத்தார். வன்முறையாளர்கள் அங்கு மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களால் முஸ்லிம் மக்கள் வீடுகளில் அச்சத்துடன் அடைந்து கிடப்பதாகவும் விசேட அதிரடிப்படையினரை மீண்டும் அந்தப் பிரதேசத்துக்கு அனுப்பி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அவர் வேண்டுகோள்விடுத்தார். இதே வேளை காலியில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து…

Read More

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்! -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு…

Read More

மஹிந்தவை ஜனாதிபதியாக ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது: சிரேஸ்ட அமைச்சர் பௌசி

அஸ்ரப் ஏ. சமத் ‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இம்முறை ஜனாதிபதியாக வருவதற்கு வேற்பாளராக ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரேரித்தார். நான் அதனை ஆமோதித்தேன். அதற்காக முஸ்லீம்கள் சந்தோசப்படல் வேண்டும். நான் ஓரு முஸ்லீம். மஹிந்தவை கட்சியில் ஆமோதிப்பதற்கு எனக்குத்தான் முதலில் சர்ந்தப்பம் வழங்கப்பட்டது’ என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார். நேற்று மருதானை சங்கராஜமாவத்தையில் உள்ள தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை 850 இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தி திறந்து வைக்கும்…

Read More

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர்வர்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் றிசாத் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது; கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டை…

Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு  அமைச்சர் ரிஷாட்  அழைப்பு

யுத்தத்தின் கோரத்தழும்புகளாக மாறியிருக்கும் காணாமல்போனோர் பிரச்சினை, நீண்டகாலமாக  சிறைகளில் வாடிக்கிடக்கும்  அப்பாவி இளைஞர்களின் விடுதலை, காணிகளைப் பறிகொடுத்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அவலம் போன்ற இன்னொரன்ன தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக  கட்சி, பிரதேச, இனவேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘நிலமெவகர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் இன்று காலை (28)…

Read More

பாலித்த தெவரப்பெரும பிணையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும இன்று கடுமையான நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச் சீட்டை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தவிர பாராளுமன்ற உறுப்பினருக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அகலவத்தை நகரில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

Read More

உயிருக்கு போராடும் பொத்துவில் சகோதரனுக்கு உதவுங்கள்

பொத்துவில்-14, அல்-நஜாத் வீதியை அல்லது பொத்துவில்-5 உல்லை சவாளை சேர்ந்த மர்ஹும் முகம்மது முஸ்தபா(தந்தை), முகம்மது அனிபா ஸபுரா பீபீ (தாய்) ஆகியோரின் மகனான முகம்மது முஸ்தபா முகம்மது ஸாஜித் (வயது-21) எனும் இளைஞரின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வேளையில் குறித்த இளைஞரின் சிறுநீரகத்தை சீராக்குவதற்க்கு சுமார் 2750000/= ரூபாய்கள் தேவைப்படுகின்றது. எனவே அன்புக்குரிய சகோதரர்களே குறித்த இளைஞன் சுகமாக அல்லாஹ்விடத்தில் பிராத்திக்குமாறும். உங்களால் முடிந்த நிதியுதவிகளை பின்வரும் விபரம் உடைய கணக்கிக்கு(வங்கி) அனுப்பி குறைந்தது share…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் காலி நகரில் நேற்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டதுடன் வரைதல் போட்டி, ஒலிம்பிக் தின ஓட்டம் என்பன நடைபெற்றன. சர்வதேச ஒலிம்பிக் குழு 1894இல் ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் நவீன ஒலிம்பிக் அமைப்பின் பிறப்பைக் கொண்டாடுவதும்…

Read More

கைத்துப்பாக்கியுடன் செல்பி எடுத்த பெண்ணின் நெற்றியில் குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்த ரஷ்ய பெண்ணின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). செல்பி பிரியரான அவர் விதவித மான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பாதுகாவலர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்த வெரோனியா அதனுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். அப்போது அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியது. இதில் அவரது…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம்!

பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொது உயர்தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் அனைவரும் இவ் விண்ணப்ப படிவ கையேட்டினைப் பெற்று விண்ணப்பிக்க முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்ப கையேட்டில் தேவையான தகவல்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்….

Read More