Headlines

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழா




நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒழுங்கு செய்துள்ளார். 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்திய பொதுத் தேர்தல் மூலம் உருவான தேசிய அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற நன்மைகளை புலப்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *