Headlines

ஆத் சமூகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்… திருக்குரானில் அறிவித்த அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது… மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும பெரிய உடலும் கொண்டவர்கள்அல்லாஹ்வின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் என குரானில் அறிவிக்கப்பட்டது.. திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று இதுவாகும்… மாஷா அல்லாஹ் … அல்லாஹு அக்பர்..

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

 எதிர்க்கட்சி தலைவரின் தந்தையை கொன்றவர் சிக்கினார்

கொழும்பு மாநகர சபையின் தற்போதையை எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான கருணாரத்ன லியனகவே 1986ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடி தலைமறைவாகியிருந்த டப்ளியு. எம். திலகசிறி என்றழைக்கப்படும் நபர் 22 வருடங்களுக்கு பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரில்லாமல் இடம்பெற்ற வழக்கில் அவருக்கு, மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், 22 வருடங்களுக்கு பின்னர், புறக்கோட்டை மெனிங் சந்தையில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டார். சனிக்கிழமை கைதுசெய்யப்பட்ட அவர், நீதவானின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிமை வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

බංග්ලාදේශ අගමැතිනිය හා ජනපති අතර ද්වීපාර්ශවික සාකච්ඡා

– නිලුපුලී – බංගලාදේශයේ සංචාරයක නිරත ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා සහ බංගලාදේශ අගමැතිනි ෂෙයික් හසිනා මහත්මිය සමග  වෙළඳ සබඳතා ශක්තිමත් කරගැනීම සඳහා ද්විපාර්ශවික සාකච්ඡාවක්   පසුගිය දින එනම් ( මැයි 27) ජපානයේ නගෝයා නගරයේදී පැවැත්වූ අතර ස්ථාවර මිල ක්‍රමයක් යටතේ දෙරට අතර ඇගලුම් ආනයනය සහ අපනයනය පවත්වාගෙන යාමටද මෙහිදී ඔවුන් එකඟත්වයකට පැමිණි අතර  ඖෂධ මිලදී ගැනීමේ…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை!

கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தைக்கப்பட்ட பாடசாலை சீருடை விநியோகம் இராணுவத்தினரால் நேற்று முந்தினம்(15) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் நாட்டில் நீடித்த சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சுற்றயல் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக கொலன்னவ, வெல்லம்பிட்டி, ஒருகடவத்த, மீத்தோட்டமுல்ல மற்றும் அங்கோட ஆகிய பிரதேசங்கள் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இவ் அனர்த்ததின் போது நிவாரண மற்றும்…

Read More

ஐ.எஸ் களைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை பயங்காட்ட முயற்சி

வடக்கில் புலிகளைக் காட்டி தெற்கிலுள்ளவர்களை தூண்டிவிடுவதற்கும், வெளிநாட்டிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.  பயங்கரவாதிகளைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை அச்சமூட்ட முனைவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க  தெரிவித்தார். “சலகுன” எனும் தனியார் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நாட்டை சமஸ்டியாக மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். வடக்கிலுள்ள தமிழர்கள் தெற்கிலுள்ள சிங்களவர்களை ஒதுக்கி தனியாக பிரிந்து நின்று வாழ்வதற்கு…

Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

சுசில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த வாக்குமூலம் வழங்குவதங்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சாங்க தொலைக்­காட்சி ஒன்றில் விளம்­ப­ரங்­களை பிர­சு­ரித்­த­மைக்கு கட்­டணம் வழங்­காமை தொடர்­பி­லேயே இவ­ரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மக்காவிற்குச் செல்ல எங்களிடம் உதவிகேட்டனர் முஸ்லிம்கள்! BBS

புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச் செல்வதற்காக ஆவன செய்து தருமாறு கேட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பணிப்பாளர் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார். முஸ்லிம்கள் சிலர் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்திற்கு வந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தாங்கள் சந்திக்க வந்தாகவும், அவருடன் கலந்தாலோசிக்க வந்ததாகவும், தான்…

Read More

மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை

 மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை  தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார். மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில்…

Read More

சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

சவூதி வாழ் சொந்தங்களுக்கு ஓர் அறிவித்தல்!

எம். ஹூஸைன்கனி, ரியாத். சவூதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கைரேகை பதிவுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள தகவல் தாங்கள் அறிந்ததே. தற்போது அது துரிதப் படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் (பெண்களும் குழைந்தைகளும்) பாஸ்போர்ட் (ஜவஸாத்) அலுவலகம் சென்று கூட்ட நெரிசலில் தவிப்பதாக தகவல் அறிந்தோம். சவூதி பாஸ்போர்ட் துறையினரால் நாடு முழுதும் ஷாப்பிங் மால் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் கைரேகைப் பதிவு செய்யும் இடங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. பெண்களும், குழந்தைகளும் அங்கு சென்று…

Read More