Headlines

ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று, கட்சியின் தவிசாளர் அமீர் அலியின் தலைமையில்  இடம்பெற்றது. தவிசாளர் அமீர் அலியின் இல்லத்தில் (14) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கல்விமான்கள், மௌலவிமார், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள, தமிழ் முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பு செயலாளர்களான ஆனந்த, பொறியியலாளர் கிருஷ்ணா மற்றும் கணக்காளர் நடராஜா உட்பட பெருமளவிலானவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், ஜமாலியா பிரதேசத்தில் நேற்று மாலை (17) இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்கு தாம்…

Read More

ரோஹிங்க்யா மக்களுக்கு ஒற்றுமையாக போராடும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அமைப்புக்கள் !

Abusheik Muhammed பிலிப்பைன்ஸ் நாட்டில் பங்க்சா தலைவர் ஆலன் பலன்கி என்பவர் மியான்மர் அரசை வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார் 1.3 மில்லியன் ரோஹிங்க்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தி மியன்மார் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் நோபல் பரிசு பெற்ற ஆங் சூ கி அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார் . பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்த விராது 969 அமைப்பின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் , மியான்மார் அரசாங்கம் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மையாக…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையில் 4200 பேருக்கு வேலை வாய்ப்பு… பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு!

-முர்ஷித் கல்குடா- எதிர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.ரி.எம்.புர்கானின் காரியாலயத்தை மிராவோடை மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-…

Read More

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” – விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில், இன்று (27) இடம்பெற்ற ஐந்து மணிநேர விசாரணை முடிவடைந்த பின்னர், வவுனியாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “அரசியல் ரீதியில் எம்மை வீழ்த்துவதே பொது எதிரியின் நோக்கம். நமது கடமைகளை சரிவரச் செய்வதில் கவனம் செலுத்துவோம். தூரநோக்குடனும் பொதுநல சிந்தனையுடனும்…

Read More

மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை

அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல நேற்று தெரிவித்தார். அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகவிய லாளர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் 25 வீத மின்கட்டண குறைப்பையும் இதன் போது அமைச்சர்…

Read More

சமாதியை கடக்கும் போது சத்தமில்லை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Read More

தும்பு தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கொழும்பில் உயர்மட்டக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி, அக்கரைப்பற்று, விருதோடை, நல்லாந்தழுவ, புழுதிவதிவயல், கடையாமோட்டை, கனமூலை ஆகிய பிரதேசங்களில்…

Read More

துபாயில் சம்பளம் கிடைக்காததால் திருமணத்தை நிறுத்திய இந்திய என்ஜினீயரின் சோகம்

ஐதராபாத்தைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஒருவர் தான் வேலைப்பார்த்த நிறுவனம் சம்பள பணத்தை கொடுக்காததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணச்சிக்கலில் தனது திருமணத்தையே நிறுத்தியுள்ளார். ஐதராபத்தைச் சேர்ந்த முகமது அப்துல் காதீர் (வயது 30) என்பவர் துபாயில் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644). ஆனால் கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் வாங்கினார். அதன்பின் அந்த நிறுவனம்…

Read More

எருக்கலம்பியடி கிராமத்திற்கான அதி நவீன பாதை அமைப்பிற்காக 110 மில்லியன் ஒதுக்கீடு

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்களது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்குளம் பிட்டி கிராமத்திற்கான அதி நவீன பாதை மற்றும் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இவ்…

Read More

தவிசாளர் முஜாஹிர், பேசாலை கிறிஸ்தவ பாதிரியாரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், இன்று (16) பேசாலை கிறிஸ்தவ பாதிரியார் பெனோ அலெக்ஸ்சாண்டர் சில்வா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார், இதன்போது, மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இப்பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தினை, மாவட்டத்தின் சிறந்த பிரதேசமாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்வதாக தவிசாளர் வாக்குறுதியளித்துள்ளார்….

Read More

ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்தவும், ரணிலை ஜனாதிபதியாக்கவும் பாடுபடுவேன் – சஜித் பிரேமதாச

எமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஐ.தே.கட்சியை ஆட்சி பீடமேற்றுவதற்காக அனைத்து விதமான தியாகங்களையும் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு நாட்டில் ஐ.தே.க. ஆட்சியை ஏற்படுத்த பாடுபடுவேன். அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காக எனது முழு பலத்தையும் வழங்குவேன் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

Read More