Headlines

ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள, தமிழ் முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!





-ஊடகப்பிரிவு-

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பு செயலாளர்களான ஆனந்த, பொறியியலாளர் கிருஷ்ணா மற்றும் கணக்காளர் நடராஜா உட்பட பெருமளவிலானவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், ஜமாலியா பிரதேசத்தில் நேற்று மாலை (17) இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்கு தாம் முன்னின்று செயற்படுவதாக மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட இவர்கள் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *