Headlines

தவிசாளர் முஜாஹிர், பேசாலை கிறிஸ்தவ பாதிரியாரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், இன்று (16) பேசாலை கிறிஸ்தவ பாதிரியார் பெனோ அலெக்ஸ்சாண்டர் சில்வா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்,

இதன்போது, மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இப்பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தினை, மாவட்டத்தின் சிறந்த பிரதேசமாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்வதாக தவிசாளர் வாக்குறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் டிஸ்னா ஆசிரியை, பிரதேசத்தின் இணைப்பாளர் உதயா ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *