Headlines

‘பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அரசியலிலே புதுமுகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெறச் செய்தால் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று, அதிகமான அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஏ.யூ.நாசரை அறிமுகப்படுத்தும் கூட்டம், பிறைந்துரைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு…

Read More

9 பேர் இஸ்லாத்தை தழுவினர் ! (படங்கள் இணைப்பு)

– அப்துல் ஹமீது ஸாலிஹ் – இறைவனின் மாபெரும் கிருபையினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் நேற்று  முன்தினம்  (22.06.15) இஃப்தார் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து அல்மனா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகை நடைபெற்றது. அதன்பிறகு, பிலிப்பைன் நாட்டை சேர்ந்த 9 கிறித்தவ சகோதரர்கள் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும் கலிமா ஷஹாதாவை முன்மொழிந்து உறுதிமொழி ஏற்றனர். மக்ரிப் தொழுகைக்கு வந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு சலாம்…

Read More

சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு

மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட்டொன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட  போதே விசேட விடயங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டிய அவசியமில்லை!– ஜே.வி.பி.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது. ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது. ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின்…

Read More

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சி

உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று  5% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர் ஈரான் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதுடன் ஈராக்கும் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. அதேபோன்று சவூதி அரேபியாவும் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.இந்த நிலமையே எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும்.

Read More

முஸ்லிம்கள் தம் காணிகளில் உள்ள, பற்றைகளை துப்புரவு செய்வது காடழிப்பு அல்ல – ஜனுபர்

– பாரூக் சிஹான் – முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபரின் கூற்றினால் பிற்போடப்பட்டுள்ளது. மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணிவரையில் நடைபெற்றிருந்தது முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது…

Read More

கொழும்பு நடைமுறை மாநாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம்

கொழும்பு நடைமுறை மாநாட்டில் ஐந்து பிரதான விடயங்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எட்டப்பட்டதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல தெரிவித்துள்ளார். அவர் நேற்று (25) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தொழிலாளர்களின் ஆற்றல்களை கண்டறிதல், சிறப்பான தொழில்வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள், தொழில் சந்தை ஆய்வு, அந்நிய நாட்டு செலாவணியை முறையாக கவர்ந்திழுத்தல் ஆகிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் கூறினார். கொழும்பு நடைமுறையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டமும்,…

Read More

பலசேனாவின் அச்சுறுத்தல்: ஜனாதிபதி மஹிந்தவிடம் முறையீடு

பொதுபல சேனாவின் அச்சுறுத் தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ­விடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதி ராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய மியன்மார் பெளத்த பிக்கு அஸின் விராதுவிற்கு விசா வழங்கக்கூடாது என ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை அண்மையில் கோரியிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பில் கலபொட அத்தே ஞானசார தேரர் முஸ் லிம் பேரவைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விராது…

Read More

வன்செயலை தூண்டிய யூதர்கள் கைது

அரபு மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டிய சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய போலிஸார் யூத தீவிரவாத குழு ஒன்றின் 10 உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள். யூதர்களும் அரபுக்களும் ஒன்றாக வாழும் கொள்கையை எதிர்க்கின்ற ”லெகவா” என்னும் குழுவைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். ஜெரூசலத்தில் யூத மற்றும் அரபுச் சிறுவர்கள் ஒன்றாகப் படித்த பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இந்தக் குழுவைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்துள்ளது.

Read More

இனி எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை

கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது.  என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான…

Read More

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…

Read More

மியன்மார் முஸ்லிம்கள் நசுக்கப்படுவது போன்று இலங்கையிலும் அதே நிலை உருவாகக் கூடாது – அமீர் அலி.

மியன்மார் நாட்டில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவது போல் இலங்கையிலும் நடைபெறாமலிருக்க அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியிலுள்ள அரபுக் கல்லூரி ஒன்றுடன் அமைச்சர் இல்லத்தில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில், இதில் விசேடமாக அரபுக் கல்லூரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் அதில் கல்வி கற்கும் ஒருவர்…

Read More