Headlines

தவறை ஒப்புக் கொண்ட மஹிந்த!




இலங்கையின் ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில் தவறுகள் இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது ஒப்புக்கொண்டுள்ளார். தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகஉறுப்பினர்கள் இழைத்துவிடக்கூடாது என்றும் மகிந்த ராஜபக்ச அறிவுரை வழங்கினார். முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
நல்லிணக்கம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் கேட்கும் எல்லாவற்றையும் கொடுப்பதல்ல. அதேபோல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்யவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *