Headlines

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை ; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியவர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையொன்றை அவரமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட்…

Read More

12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை

-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ராஜபக்சவிற்கு ஆதரவாக குரல் எழுப்ப தயார்: மேர்வின் சில்வா

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது கவலையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு பின்னர் தான் இதுவரை அவருடன் கதைக்கவில்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். சட்ட விதிகளுக்கு முரணான வகையில் ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால், தான் அதற்கு…

Read More

ஐரோப்பிய யூனியனில் தொடர்வதா, வேண்டாமா? இங்கிலாந்தில் வாக்கெடுப்பு நடப்பது சந்தேகம்

28 நாடுகளின் அரசியல், பொருளாதார கூட்டமைப்பாக ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. இந்த ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிப்பதா, வேண்டாமா என்ற சர்ச்சை அங்கு எழுந்தது. இதையடுத்து பிரதமர் டேவிட் கேமரூன் கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடிவு செய்தார். இந்த கருத்து வாக்கெடுப்பு வருகிற 23-ந் தேதி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பிரசாரமும் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாகூட கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வந்து, ‘ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மன்னார் விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தாணிகர் மேஜர் ஜெனரல் காசீம் குரைஸ் இன்று (28) காலை அமைச்சர் றிசாத்;பதியுத்தீனின் அழைப்பின் பேரில் மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.   அவர் அப்பிரதேசங்களில் எவ்வித அடிப்படையுமின்றி வாழ்ந்து வரும் முஸ்லீம்களையும் அவர்களது அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படம்.  

Read More

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டம்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலைமனுக் கோரல் மோசடிகள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடிய வகையில் பொது முயற்சியான்மை சட்டமூலமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை மனுக் கோரல் மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மோசடிகளுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட…

Read More

கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டதினை ஆரப்பித்து வைத்த இஷாக் எம்.பி.

அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட 232 – கஹடகஸ்திகிலிய மேற்கு கிராம சேவகர் பிரிவின் கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் கரங்களால் ஆரம்பிக்கும்போது

Read More

பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு

இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார…

Read More

தேர்தல் ஆணையாளரை சந்திக்கின்றது கூட்டமைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்திக்க உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாரளுமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து…

Read More

பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் 22 மீனவர்கள் கைது (படங்கள்)

– எம்.ஏ. தாஜகான் – பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி கரைவலையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டின் பேரில் 22 மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கரையோரத்தில் அனுமதிப்பத்திரமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் கரையோர மீன்பிடித்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கடற்றொழில் தினைக்களத்தின் அதிகாரிகள் இன்று(14)சுற்றிவளைப்பை மேற்கொண்டபொழுதே ஒரு தொகுதி மீனவர்கள் பொத்துவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.  சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்து வரும் குற்றச்சாட்டில்…

Read More

நாமல் ராஜபக்ஸவுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால்சென்ற வாரம்  கைது செய்யப்பட்ட நிலையில் இன்று  22ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை ஆகி உள்ளார்.

Read More

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் மாயம்

கொழும்பில் இருந்து யாத்திரீகர்கள் சிலருடன் யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தை ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்ற முதியவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More