Headlines

மஹிந்த ராஜபக்ச நிதியத் தலைவர் மீதும் விசாரணை!




மஹிந்த ராஜபக்ச அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சுமார் 100 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம தியகம மைதான அமைப்பு பணிகளின் போது இந்த நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதான அமைப்பின் போது தனியார் ஒப்பந்தக்காரர்களும் அரசாங்கம் ஒப்பந்தக்காரர்களுடனும் இணைந்து மோசடி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மைதான அமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்கவும் அண்மையில் விசாரணை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *