Headlines

பொதுபலசேனா உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு

பொது ஜன பெரமுனவின் (பொதுபலசேனா) உறுப்பினருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது. இனவாதக் கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்குமுகமாக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது ஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த குமாரசிங்கவுக்கு எதிராக சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.ரி சட்டத்தரணிகள் அமைப்பு இம்முறைப்பாட்டை செய்துள்ளது.

Read More

புறகோட்டையில் முகக்கிறீம் கடைகள் இரண்டு சீல் வைப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு புறக்கோட்டையில் அமைந்துள்ள இரண்டு வர்த்தகக் கடைகளில் 11 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள சுமார் 3800 மேற்பட்ட முகத்துக்கு பூசும் கிறீம்களை நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இன்று காலை (03) கைப்பற்றினர். இந்த கிறீம்களை கொண்டிருந்த டியுப்களில் விலைகளோ, காலாவதியாகும் திகதியோ, உற்பத்தி செய்யப்பட்ட திகதியோ, வியாபார பதிவிலக்கமோ குறிப்பிடப்படாது அவை விற்பனை செய்யப்பட்டு வந்ததனாலேயே அதிகாரசபை அதிகாரிகள் இதனைக் கைப்பற்றியதாக தெரிவித்தனர். ஒரு வர்த்தக நிலையத்தில் 2500 கிறீம் டியுப்களும் இன்னொரு வர்த்தக…

Read More

தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!

– எம்.எஸ்.எம்.நூர்தீன் – கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது. இந்த…

Read More

இலங்கை வரவுள்ள மலேசியா துணை பிரதமர்

மலேசியாவின் துணை பிரதமர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி. அஹமட் ஷெஹித் ஹமிடி இரண்டு நாள்   உத்தியோகபுர்வ விஜயமொன்றினை மெற்கொண்டு இன்று (21)  இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமரின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல ஆகியோரை சந்திக்கவுள்ளார். குறித்த…

Read More

சம்மாந்துறையை கௌரவப்படுத்திய மயிலுக்கு சம்மாந்துறை மக்கள் செய்யப்போகும் பிரதியுபகாரம் என்ன..? களங்கம் துடைப்பார்களா…?

சம்மாந்துறைகென்று பல தனித்துவங்களுள்ளன. அது அரசியல் ஜாம்பவான்கள் பலரை பிரசவித்த ஊர். இதிலுள்ள அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் நாகரீகமான பண்புகளையே வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மயில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தது. அன்று மயிலுக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தால், அது வீ.சியுடைய ஆசனமாக இருந்திருக்கும். அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் திரட்டி சம்மாந்துறை மகனொருவனை பாராளுமன்றம் அனுப்பிவைக்க மயில் திட்டம் தீட்டியது. இது சம்மாந்துறைக்கு மயிலால் கிடைத்த பெருங் கௌரவங்களில் ஒன்றல்லவா..? இரண்டாவது…

Read More

110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி, வபாத்தான அப்துல் ரஹ்மான்

மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார். ஊட்டியை…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் இறக்காமத்தில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு வீடுகள்.

இறக்காமத்தில அண்மையில் உணவு நஞ்சானதில் உயிர் இழந்த குடும்பத்துக்கு வீடு கட்டித்தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில்  அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் அவர்களினால்  வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இன்று அதற்கான முதற்கட்ட 100000/- பணம் உயிர் இழந்த மூன்று குடும்பங்களுக்கும் முன்னால் மேயரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ்  மீராசாஹிபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

கடும் காற்று! மக்கள் அவதானம்

மலையகத்தின் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது. இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள அதேவேளை, தொடர்ந்தும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது

ஏ கே எம் சியாத் வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு (Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ எச் எம் முபாரக் மெளலவி தலைமையில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்  வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாகதிறந்து…

Read More

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்” உணவு, பொதியிடல் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்;.  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த  மண்டபத்தில் உணவு, பொதியிடல், விவசாயம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் இன்று (04.08.2017) அங்குரார்ப்;பணம் செய்துவைத்தார். எதிர்வரும் 6ம் திகதிவரை இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை இலங்கை உணவு  பதனீட்டாளர்கள் சங்கம் மற்றும் இலங்கைப் பொருட்காட்சி, மாநாட்டு சேவைகள் நிறுவனம் ஆகியவை இணைந்து…

Read More

புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD),  புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்  என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். கணிதத்துறை அதிமுக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அது தொடர்பாக, நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது….

Read More

தொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் – வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க,   தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்துறை சார்ந்த  கைத்தொழில் உபரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர். ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரீபதி, உதவித் திட்டமிடல்…

Read More