Headlines

மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் இர்பான் தாஹிர்!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும், அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நேற்று (22) இடம்பெற்ற போதே, இர்பான் தாஹிர் மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.
குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், சதொச பிரதித்தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பொருளாளராகவும்  அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான்,பிரதேசசபை உறுப்பினர்களான அஸ்ஹர், ஸபீர் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *