Headlines

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையருக்கு மன்னிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இலங்கை பிரஜையிடம் இழப்பீட்டை பெற்றுக்கு மன்னிப்பு வழங்கினார். இதனையடுத்து அவர் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் தந்தைக்கு மூன்று லட்சம் ரியால்களை இழப்பீடாக வழங்குமாறு இலங்கை பிரஜைக்கு…

Read More

பேஸ்புக் காதலால் பிக்கு கைது

பேஸ் புக்  ஊடாக 18 வயது யுவதியை காதலித்து ஏமாற்றிய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமாகி தன்னை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றிய பிக்குக்கு    எதிராக குறித்த யுவதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனையடுத்து சந்தேக நபரான பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர்.இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளார்.பௌத்த பிக்கு குறித்த யுவதியிடம் தம்மை சாதாரண ஓர்…

Read More

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைப்பு

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில்  கலைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். நிர்வாகத் தேவையின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கருதி அரச பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தனி பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சலுகைகள் கிடையாது; மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்: அஜித் ரோஹண

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியங்கள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். விசாரணையின் போது கோத்தபாய ராஜபக்ஷவுக்கு விசேட சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்திலும் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை…

Read More

க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

முஸ்லிம் கல்வி முன்னேற்றக் கழகம் 10ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9 ஏ (A) சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) கொழும்பு, நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அகமத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்…

Read More

BREAKING NEWS மண்சரிவில் இருவர் சாவு ; 400 பேர் மாயம்(இரண்டாம் இணைப்பு )

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இருவர் பலியானதுடன் 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளது. மீரியபெத்தையில் 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புகளே இவ்வாறு மண்ணில் புதையுண்டுள்ளன. 7 ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில்…

Read More

ராஜீவ் காந்தி திருமணம்: அரிய வீடியோ பதிவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய திருமண வீடியோ யூ டியூபில் வெளியாகியுள்ளது.  பிங்க் நிறப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சோனியா காந்தியும்(21),  தனது டிரேட் மார்க் உடையில் மாப்பிள்ளையாக ராஜீவ் காந்தியும்(23),  உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்து கொள்ளும் வீடியோ, பிரிட்டிஷ் மூவிடோன் என்ற யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் அரிய ஆவணமாக கருதப்படுகிறது.

Read More

கடாபியின் உதவியை, நன்றியுடன் நினைவுகூறும் மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால்,…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளை வாதுவை , மோதரமுல்லை திறந்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வாதுவை, மோதரமுல்லை பிரதேசத்தில் லங்கா சதொச கிளை இன்று வியாழன் (04) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ லக்ஷ்மன் விஜேமான மற்றும் கெளரவ அதிதிகளாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், களுத்துறை…

Read More

தேசிய பல்கலை கூடைப்பந்தாட்டக்கு கிழக்கிலிருந்து இருவர்!

இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன் மற்றும் கிறிஸ்ரின் விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சீனாவில் எதிர்வரும் மாதம் 19 – 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 3 – 3 கூடைப்பந்தாட்டதொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் இருவரும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு சங்கம் மு.பரணிதாசனை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களாக எபோலாவுடன் போராடிய மருத்துவ குழு – TIMES பத்திரிகை

டைம்ஸ் பத்திரிகை (Time magazine) இவ்வருடத்துக்கான (2014) மிகச் சிறந்த நபர்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் தாம் ஓர் ஆட்கொல்லி நோயால் தொற்றப் பட்டு மரணமடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்ற போதும் தமது உயிரைப் பொருட் படுத்தாது எபோலா நோயால் பாதிக்கப் பட்ட ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் மரணித்த மேலும் இன்னமும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத் தாதியர்களையும் தேர்வு செய்து கௌரவப் படுத்த முடிவு செய்துள்ளது. இது…

Read More

இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு சந்தித்துள்ளார். தேசிய நல்லிணக்க கொள்கையை வலுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அனைத்து மாகாணங்களுக்கும் நியாயமான அபிவிருத்தியை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்…

Read More