Headlines

மலையகத்திற்கான ரயில் சேவை இடைநிறுத்தம்




மழை காரணமாக இஹல கோட்டே மற்றும் பலன ஆகிய இடங்களில் ரயில் பாதை (தண்டவாளம்) கீழிறங்கியுள்ளதால் கண்டி மற்றும் ரம்புக்கனே ஆகிய பிரதேசங்களுக்கிடையேயான ரயில் சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

ரயில் பாதை கீழிறங்கியுள்ளதால் கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி, பதுளை நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலும் இடைநடுவில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *