Headlines

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கினால் பணப்பரிசு

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read More

உளவுத் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம்

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்த பூசல்கள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக இதுதொடர்பான உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், ராணுவ தலைவர் ரஹீல் செரீப் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் ரிஸ்வான் அக்தார் ஆகியோர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. தலிபான் தீவிரவாதிகளை…

Read More

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்ட சகோதரி அவசர உதவியை நாடுகிறார்

சாயந்தமருது -17 குத்தூஸ் வைத்திய வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய எஸ். ஏ. நளீறா என்ற பெண்மணி இரு சீறுநீரங்களும் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய உடல் நிலை பாதிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவசரமாக தனியார் வைத்தியசாலையில் சிறுநீராக மாற்று அறுவைச் சிகிச்சை  செய்யுமாறு வைத்தியஅதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே இதன் பிரகாரம் வைத்திய செலவுக்காக 35 இலட்சம் ரூபா செலவு தேவை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி…

Read More

“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­ற ங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.நீதி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்­தொ­ட ரின் பின்­னரே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற வகையில்…

Read More

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வாட்ஸ்-ஆப்

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும். கடந்த 1982ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு…

Read More

முஸாமிலுக்கு பிணை!

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த மொகமட் முஸாமிலைபிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொகமட் முஸாமில் சற்று முன்னர் முன்னிலையானபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்கடந்த மாதம் 20ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.

Read More

பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மக்கோனை பாடசாலைக்கு விஜயம்!

மக்கோனை ஸ்ரீ ஸம்புத்தராஜா வித்தியாலய அதிபரது வேண்டுகோளை ஏற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்று (04) பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இப்பாடசாலையானது 30% சிங்கள மாணவர்களையும் 70% முஸ்லிம் மாணவர்களையும் கொண்டியங்கக் கூடிய இந்தப் பாடசாலையில், நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அதிபரால் ஹஸீப் மரிக்காரிடம் முன்வைக்கப்பட்டது. இவற்றைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப், இது தொடர்பில் கலந்தாலோசித்து விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும், பாடசாலையின்…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் தமிழன் என்பதால் முகாம்களுக்குள் செல்லத் தடையா?

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்பதால் தான் இராணுவ முகாம்களுக்குள் செல்லத் தடையா? அவ்வாறு தடை விதித்தது யார்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மற்றைய நாட்களில் நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார். கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை…

Read More

மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் மஹிந்த

வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று தாய்லாந்தின் உடம் தானி விஹாரையில் நிர்மாணிக்கப்பட உள்ள கலச கோபுரமொன்றிற்கான புனித தாதுக்களை புதைக்கும் நிகழ்வில் மஹிந்த பங்கேற்றார். மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த புனித தாதுக்கள் தாய்லாந்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று முன்தினம் மஹிந்த தாய்லாந்து விஜயம் செய்திருந்தார். இதேவேளை, லாவோஸ் எல்லைப் பகுதியின் மலை உச்சியில்…

Read More

பொருட்களை விலை குறைத்து தரவில்லையா..? இங்கே முறையிடலாம்..!

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 0716027912 – 0788714726 – 0777205137 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பில் முறையிடுமாறு அவ்விரு சங்கங்களும் கோரியுள்ளன. தங்களுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உறுதி செய்துகொண்டு நுகர்வோர் அதிகார…

Read More

தம்பிடிய, நிதுல்லகஹபிடிய வீதியோர மின்விளக்குகள் திருத்தியமைப்பு!

-றிம்சி ஜலீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான ரஸ்லான் ரஸீன், அப்துல் ஹமீத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, மிகநீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாமல் இருந்த தம்பிடிய, நிதுல்லகஹபிடிய கிராமத்தின் வீதியோர மின்விளக்குகள், மக்கள் காங்கிரஸின் குளியாப்பிட்டிய பிரதேச சபையின் உபதவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் நேற்று (12) திருத்தியமைக்கப்பட்டது.  

Read More