Headlines

CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் காணி பறிபோகிறது

டி.ஏ. ராஜபக்ஸ அமைப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையை பிழையாக வழிநடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேறும் எந்தவொரு பணிக்காகவும் குறித்த காணி பயன்படுத்தப்பட மாட்டாது என நிபந்தனையை மீறி ராஜபக்ச அமைப்பு, சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவைக்கு காணிகளை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட உள்ளது. நிபந்தனைகள் மீறப்பட்டிருந்தால் குறித்த காணிகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த சட்டவிரோத…

Read More

இஸட் வெட்டுப் புள்ளிகள் வெளியானது

பல்கலைக்கழங்களுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளும் வெட்டுப் புள்ளிகள்http://www.ugc.ac.lk/ (link is external) என்ற இணைத்தளத்தில் பார்வையிடலாம் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில்  மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட உள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து…

Read More

12 ஆம் திகதி புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் தர புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. பஷ்பகுமார தெரிவித்தார். இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றதுடன் 8 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுக் காலை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் மு.ப. 10.30 மணியளவில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும், சிறு வர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தும்…

Read More

மட்டக்களப்பு பொலிஸாரின் போக்குவரத்து விழிப்புணர்வு

மட்டக்களப்பு, பாசிக்குடா வீதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதை அடுத்து  கல்குடா போக்குவரத்துப் பொலிஸார் பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்கள்  மத்தியில் விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வுகளை நடத்தினர். வீதியில் எவ்வாறு போக்குவரத்துச் செய்வது என்பது தொடர்பான பயிற்சியும் விளக்கமும் பாசிக்குடா வீதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளக்கங்களை செய்கை முறை மூலம் மாணவர்களையும் உள்வாங்கி விளக்கம் அளித்தனர் பொலிஸார். வாரத்தில் ஒருநாள் இந்தச் செயற்பாடுகள் நடத்தப்படும் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

உலக ஆசிரியர் தினம் இன்றாகும்

உலக ஆசிரியர் தினம் இம்முறை ஆசிரியர்களை வலுப்படுத்தி நிலையான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினமானது நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கையில் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  ஆசிரியர்கள் வெறுமனே கல்வியை மட்டுமே கற்பிப்பவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வலுவான, நிரந்தரத்தன்மையுடைய சமூகத்தை கட்டியெழுப்ப காரணமாயிருப்பதுடன் கற்றல் அறிவினூடாக மூலமாக ஆக்கத் திறன் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புகின்றனர். மேலும் ஒழுக்க விழுமியங்கள்,  கோட்பாடுகளை  தொடர்ச்சியாக கொண்டு செல்ல காரணமாயிருக்கின்றனர் என…

Read More

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: 70 பலஸ்தீனர்கள் காயம்!

பழைய ஜெருசலேம் நகரப் பகுதிக்குள் பாலஸ்தீனியர்கள் செல்லமுடியாதபடி இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இரண்டு நாட்களுக்கு அமலில் இருக்கும். அங்கு குடியிருக்காத பாலஸ்தீனியர்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.  பலஸ்தீனர்களுக்கு எதிராக, இஸ்ரேலிய பாதுகாப்பு படை மற்றும் யூத குடியிருப்பாளர்கள் நடாத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணிநேரத்தில் 70 க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

கடாபியின் உதவியை, நன்றியுடன் நினைவுகூறும் மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் எடுத்துக்காட்டினாலும், அந்த நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார். மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஸ்தாபிக்கப்படும் விசாரணைப் பொறிமுறையில் பாதுகாப்பு படையினரில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்று சந்தேகப்படுவோர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை என்றால்,…

Read More

இலங்கையர்களின் ஹஜ் குழு நாடு திரும்பியது

– அப்துல் மலிக் சரீப் – பலவருடங்கள் அனுபவம் வாய்ந்த ஹஜ் வழிகாட்டியான அல் ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்களின் தலைமையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள RJ Travels  உரிமையாளரான அல் ஹாஜ்.எம். ஜே.எம். ரிஸ்விஅவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டஹஜ் குழு நேற்று நாடு திரும்பியது. இக்குழுவை வரவேற்பதற்காகவும் அவசரமாக ஹாஜிகளை விமானநிலையத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவும்  ஜித்தா சர்வதேச விமான நிலையமூத்த அதிகாரியானஎம். எச.;முஹம்மத் ரிள்வான் அவர்கள் சமூகமளிதிதிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இக் குழுமக்காவில் நடந்த’கிரேன்’அசம்பாவிதம் நடந்த இடத்தை நேரடியாகச் சென்றுபார்வையிட்டதுடன்…

Read More

அடுத்தமாத பட்ஜெட் புரட்சியை ஏற்படுத்தும்!

– மகேஸ்வரன் பிரசாத் – பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வரவுசெலவுத்திட்டமே எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி முன்வைக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகளுக்கான முழுமையான நிதி ஒதுக்கப்படும். அதில் எதுவித குறைப்பும் மேற்கொள்ளப்படாது. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடியதான வரவுசெலவுத்திட்டமொன்றே இம்முறை முன்வைக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு துறைசார் வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதுவரை…

Read More

தேரரிடம் இருந்து தப்பிய 11 வயது சிறுமி

11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பெளத்த தேரர் ஒருவர் பதியத்தலாவ, மொரதெனிய பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேக நபரான தேரர் இந்தியாவின் தம்பதிவ புனிதத்தளத்திற்கு செல்ல பணம் சேகரிக்கும் நோக்கில் அப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றுள்ளார். அவ்வாறு வீடொன்றுக்கு சென்ற போது ஒரு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முயட்சித்துள்ளார். அதன்போது அவரிடம் இருந்து தப்பிய சிறுமி அறை ஒன்றுக்குள் தப்பி ஓடிச் சென்று…

Read More

புதிய திருப்பம்.. சிறுமி சேயாவை தானே கொலை செய்ததாக கொண்டையாவின் சகோதரர் ஒத்துக் கொண்டார்

ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின்…

Read More