உலக வங்கி, நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரவி
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெரு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை நடைபெறும் இம்மாநாட்டில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோரும் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த மாநாடுகளின் 188…
