Headlines

தேரரிடம் இருந்து தப்பிய 11 வயது சிறுமி




11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த பெளத்த தேரர் ஒருவர் பதியத்தலாவ, மொரதெனிய பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேக நபரான தேரர் இந்தியாவின் தம்பதிவ புனிதத்தளத்திற்கு செல்ல பணம் சேகரிக்கும் நோக்கில் அப்பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கு சென்றுள்ளார். அவ்வாறு வீடொன்றுக்கு சென்ற போது ஒரு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முயட்சித்துள்ளார். அதன்போது அவரிடம் இருந்து தப்பிய சிறுமி அறை ஒன்றுக்குள் தப்பி ஓடிச் சென்று தாழ் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் அறையில் இருந்து வெளியில் பார்த்து சத்தமிட்டு ஊர்மக்களை அழைத்துள்ளார். அப்போது குவிந்த பிரதேச மக்கள் தேரரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட தேரர் தற்போது விளக்கமறியலில் அடைக்கட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *