கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 16வயது சிறுமி சோனியாவா?- அப்றாவா?
கல்முனையில் கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்ட 16வயது சிறுமி கேசானியா? அப்றாவா? என்பது தொடர்பில் கல்முனை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆழிப்பேரலையின் போது ஆறு வயதில் காணாமல்போன கேசானி தனது குழந்தை தான் எனக்கோரி வழக்குத்தாக்கல் செய்ததாக கல்முனையைச் சேர்ந்த எஸ்.ஜெயராசா தெரிவித்தார். கல்முனைப் பொலிஸார் கண்டுபிடித்த இச்சிறுமி சிறுவர் நன்னடத்தைப் பிரிவினூடாக அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு புகலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்சமயம் 16 வயது நிரம்பிய இச்சிறுமி அம்பாறையிலுள்ள சிறுவர் புகலிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். இச்சிறுமிக்கு உரிமை கோரி…
