காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அவதிப்படும் மக்கள்
– ஹைதர் அலி – மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரணமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியால் விவசாயிகள், மீன் பிடியாளர்கள், பன்ணை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு பகலாக பயன்படுத்தக்கூடிய வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில்…
