இந்த நாட்டில் மீண்டுமோர் அழிவைக் காண சிலர் துடிக்கின்றனர்– றிஷாத் பதியுதீன்
இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நேற்று (03) பாராளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இனவாதம் தான் இந்த நாட்டிலே 30 வருடங்களாக இரத்த ஆறு ஓடுவதற்கு வழிவகுத்தது. யாரும் விரும்பி யுத்தத்தை ஆரம்பிக்கஇல்லை. இவ்வாறான யுத்தம் வருவதற்கு காரண கர்த்தாக்களாக, இன்று இனவாதக் கருத்துக்களைப் பேசியவர்களைப் போன்று, அன்று பேரினவாத சக்திகள் ஆட்சியைக் பிடிப்பதற்காக சுயநல கொள்கையோடு இனவாதக்…
