Headlines

வாவியில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது!

தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னாலுள்ள ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம் ஓட்டமாவடி, மாவடிச்சேனையைச் சேர்ந்த மீராசாஹீப் ஹனிபா (வயது 30) என அடையாளங் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஒரு மனநோயாளி என்றும் நேற்று காலையில் வீட்டிலிருந்து வெளியேறியவர் என்றும் உறவினர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இனவாதத்தினை தூண்ட வேண்டாம்!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார். இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்….

Read More

கம்பளை முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் 85 ஆவது ஆண்டு நினைவு தின விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார் !!!

கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 85ஆவது ஆண்டு நினைவு விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (11) கலந்து கொணடார். பாடசாலையின் அதிபர் டி எம் எப் மூவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜத் ஹாஜியார் மற்றும்…

Read More

வரலாற்றில் முதல்தடவையாக, இலங்கையர் மலேசிய பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவராக தேர்வு

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மாணவர் ஒருவர் மலேசியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ”மொனாஷ்” பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரியாத் நகரில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் பழைய மாணவரும் மொனாஷ் பல்கலைக்கழக பொறியியல் பீட இரண்டாம் ஆண்டு மாணவருமான ஷிஹாப் அஸ்கர் அவர்கள் கடந்த மாதம் மாணவர் ஒன்றியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 6000க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட வாக்கெடுப்பில் 52 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று அமோக வெற்றியீட்டினார்….

Read More

மைத்திரிக்காக வாக்களித்த மக்களுக்கு எனது இதயபூர்வ நன்றிகள் – றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:- இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும்….

Read More

றிஷாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல்…

Read More

சிரியாவில் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

சிரியாவில் உள்ள கோலன் ஹெய்ட்ஸ் பகுதியை கடந்த 1967–ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இது சிரியாவின் கியூனேத்ரா மாகாணத்தில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் சிரியா எல்லையில் இஸ்ரேலின் ஆளில்லாமல் இயங்கும் விமானம் பறந்தது. அதை கண்காணித்த சிரியா ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இது ஸ்கைலார்க்–1 மாடல் விமானமாகும். இது கோலன் கெய்ட்ஸ் பகுதியில் ஹாடர் கிராமத்தில் சுடப்பட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

பர்மாவில் நடப்பது என்ன?…

=Ihsan Mohamed Salideen= யா அல்லாஹ் …..! இரக்கமுள்ள றஹ்மானே….. அகிலத்தின் அதிபதியே…! பர்மாவில் எமது உம்மத்துக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு தக்க தன்டனை கொடுக்கக் கூடிய றப்பே ……! உன் அளிவை பர்மாவுக்கு காட்டு றஹ்மானே ….! கண்கள் தத ததக்கின்றது றஹ்மானே….! இரத்தம் கொதிக்கின்றது றஹ்மானே…! பச்சிளம் பாலகன் செய்த பாவம் என்ன றஹ்மானே..? கற்பமுற்ற தாயின் வயிற்றைக் கிளிக்கின்றான் றஹமானே…! பச்சிளம் பாலகனை கொல்லுகிறான் றஹ்மானே ….! அகிலம் காப்பவனே….. அண்ட சராசரத்தின் அதிபதியே……..

Read More

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்க‌ளுக்கு அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் த‌ன‌து ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துள்ளதுடன், இன்றைய ந‌ன்னாளில் இல‌ங்கை, ப‌ல‌ஸ்தீன், மிய‌ன்மார் போன்ற‌ நாடுக‌ளில் வாழும் அக‌திக‌ளின் ஈடேற்ற‌த்திற்காக‌ அனைவ‌ரும் இறைவ‌னை பிரார்த்திக்கும்ப‌டியும் கோரிக்கை விடுத்துள்ளார். நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்ச‌ர் ரிஷாட் மேலும் கூறியிருப்ப‌தாவ‌து, “ர‌ம‌ழான் மாத‌ம் முழுவ‌தும் அல்லாஹ்வுக்காக‌ நோன்பிருந்து, அத‌ன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும்…

Read More

முஸ்லிம் காங்கிரசில் இணையவுமில்லை இணையவும் மாட்டேன் வதந்திகளை நம்ப வேண்டாமென ஹில்மி மஹ்ருப் அறிவிப்பு

  கிண்ணியா முன்னாள் நகரபிதாவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான டாக்டர். ஹில்மி மஹ்ருப் விடுத்துள்ள அறிக்கையில் போலிப்பிரச்சாரங்கள் கட்டவில்த்து மக்களை குழப்ப வேண்டாமென தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தான் சமூக நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசியல் பயணத்தில் கால்ப்பதித்து திருகோணமலை மாவட்ட மக்களின் நலனில் அக்கரை கொண்டவனாக பல்வேறு தியாகங்களுடனும் அர்ப்பனிப்புடனும் சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். திருகோணமலை மாவட்டதில் எழுச்சி பெற்று வரும் அகில…

Read More

ஜப்பான் பயணமாகிறார் ஜனாதிபதி

ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) ஜப்பான் பயணமாகிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹிரோட்டோ இசுமிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி உலகத்…

Read More