Headlines

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

ஹெரோயின் கடத்தல் முறியடிப்பு

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படவிருந்த ஹெரோய்ன் கடத்தல் முயற்சிமுறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை நேற்றுமீட்கப்பட்டுள்ளது. இதன்போது பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3.4 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திய மூன்று பாகிஸ்தானியர்கள்கடந்த வாரத்தில் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மன்னார் மறைமாவட்ட ஆயர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மரியாதைக்குரிய இம்மானுவல் பெர்ணாண்டோ அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஆகியோர், இன்று மாலை (23) ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.    

Read More

‘வடக்கு முஸ்லிம்கள்: வாக்களிப்பதற்கு மட்டும்தானா?’ (கட்டுரை)

ரஸீன் ரஸ்மின் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்…

Read More

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்; ஆயிரம் ரூபா கட்டணம்

– வி.தபேந்திரன் – அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு…

Read More

கிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபை முதல்வர் பிரியந்த பத்திரண, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பிரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்களை மு.கா ஒன்றிணைக்க வேண்டும்

பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கௌரவிப்பு வைபவத்தின் போது உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர் அலி பிரிந்து போயிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் சேர்க்க வேண்டிய பொறுப்பு…

Read More

இம்முறை எவருக்கும், எந்த மன்னிப்பும் கிடையாது

காலி, சமனல மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கட்சியில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தெரிவித்தார். கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய திசாநாயக்க, ‘இதற்கு முன்னரும், கட்சிக்கு…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More

கத்தாரில் 6 கோடிக்கு மேல் ஏலம் போகும் பேன்சி கார் நம்பர்

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக உள்ள நிலையில், எண்ணெய் வளம்மிக்க கத்தாரில், 24 தனித்த அடையாளம் கொண்ட கார் நம்பர்களுக்காக, அரசுத் துறை ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கத்தார் பணக்காரர்கள் மில்லியன் கணக்கில் ஏலம் கேட்பதால் இணைய ஏலம் களை கட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய ஏலம் இன்று இரவு வரை நடைபெறவுள்ள நிலையில். நேற்று ’377773’ என்ற பேன்சி கார் நம்பர்,…

Read More

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய தென்னாபிரிக்க விமானம்!

சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது விமானத்தில் இருந்து…

Read More

அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி

01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக  இருந்து பெரும்…

Read More