Headlines

நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படும் காலம் வந்துவிட்டது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா நாம் மானம் மறியதையுடன் வாழ வேண்டும்,மதச் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதற்காக தான் எமது கட்சி இந்த முடிவை எடுத்தது பட்டம்,பதவிகளை எமது கட்சி ஆசைப்பட்டிருந்தால் தற்போதுள்ள 62 அமைச்சுக்களில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பெரிய அமைச்சை கட்டி ஆழ்ந்திருக்கலாம் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது கட்சியில் தெரிவான வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார். வவுனியா மாவட்டத்தில்…

Read More

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினைக்கு தீர்வுக்காக நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் தலைமையிலான குழுவினர்.

  தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபை தலைவர் பௌசி, இணைப்பாளர் ரசாக் நளீமி, நீனகேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவர் அடங்கலாக இன்று பிற்பகல் நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்து இப்பிரதேசத்தில் இருக்கும் காணி முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டதுமாகவும் காணப்படுவதோடு காணிக்கான உறுதிப்பத்திரம் உட்பட உரிமத்துவதுக்கான சகல ஆவணங்களும் எமது சகோதரர்களிடம் காணப்படுவதையும் காண்பித்து விகராதிபதிக்கு…

Read More

மைத்திரி அமைச்சரவை நாளை பதவியேற்பு(?)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற 10 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு கலந்தாலோசித்து அமைச்சர்கள் குழுவை இறுதி முடிவு செய்யவார் என்று தெரிகிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர்கள்…

Read More

திங்கள் முதல் இலவச WI-FI அமுல்

எதிர்வரும் திங்கட்கிழமை மு தல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக நிறுவன பிரதானிகளை இன்று வியாழக்கிமை சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

Read More

மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பங்கொக்கை தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறுவகத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை (13.09.2017) அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்திய போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்தச் சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிம்ரின் சிங் அவர்களும்…

Read More

மைத்­தி­ரி நாளை காலிக்கு விஜயம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை காலிக்கு விஜயம் செய்­கிறார். காலி மழ்­ஹருஸ் ஸுல்­ஹியா மத்­திய கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள தொழில்­நுட்ப கூட திறப்பு விழாவில் ஜனா­தி­பதி பங்­கு­பற்­றுவார். காலை 10.00 மணிக்கு வைபவம் இடம்­பெறும். அமைச்­சர்­க­ளான அகில விராஜ் காரி­ய­வசம், வஜிர அபே­வர்­தன, பிர­தி­ய­மைச்சர் மனுச நாண­யக்­கார உட்­பட பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் விழாவில் பங்­கு­பற்­றுவர். பாட­சாலை மாண­வர்­களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

Read More

‘புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி’ – நாவிதன்வெளியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தினமும் புதிய புதிய பிரச்சினைகளையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி வருவதுடன், பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறான அடக்குதல்கள் மூலம் நாம் பணியமாட்டோம் என தெரிந்திருந்தும், புதிய புரளிகளைக் கிளப்பி, மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து, நாவிதன்வெளி மத்திய குழுத்தலைவர் மஹ்ரூப் தலைமையில், இன்று நண்பகல் (23) அம்பாரை, நாவிதன்வெளியில்…

Read More

20ஆயிரம் மில்லியன் முதலீட்டில் டெக்னோ சிட்டி ஆரம்பம்

-அஷ்ரப் ஏ சமத் – ”டெக்னோ சிட்டி” (விஞ்ஞான தொழில்நுட்ப நகரம் ) நேற்று (22) கொழும்பு – ஹோமகமவில் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முதலாம் கட்டத்திற்காக 20ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது. மேல்மாகண மெகா பொலிசி அமைச்சா் சம்பிக்க ரணவக்கவும், விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, உயா்கல்வி அமைச்சும் இணைந்தே இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்காக தேசிய விஞ்ஞான நிலையம் 3ஆயிரம் மில்லியன் ருபா, ஆர் த சி…

Read More

செல்போனில் பேச ஒபாமாவுக்கு தடை

உலகம் பயணிக்கும் வேகத்துக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் தற்போது பலவிதமான செல்போன்கள் உலா வருகின்றன. ஆனால் 2010 ம் ஆண்டிற்கு முன்பு ‘பிளாக்பெர்ரி’ செல் போன்கள் ஆதிக்கம் செலுத்தின. அவை முக்கிய பிரமுகர்கள், வசதிபடைத்த செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. ஏனெனில் அக்காலத்தில் தொழில் நுட்பத்துடன் அதிக விலைக்கு இவை விற்கப்பட்டன. இந்த ‘பிளாக் பெர்ரி’ செல்போனை தான் 2008–ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வருகிறார். இவர் அதிபர் பதவி ஏற்பதற்கு…

Read More

அரச வாகனங்களை பயன்படுத்த மாதம் 1 லட்சம் கட்டணம்

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் குறித்த அமைச்சுக்கு மாதத்திற்கு ஒருலட்சம் ரூபா செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- தேர்தல் ஆணையாளர் மற்றும் கட்சி செயலாளர்கள் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…

Read More

கொவிட் -19 நிவாரண நிதியத்துக்கான பங்களிப்பு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோனா (Covid -19) நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பை கடந்த மாதமுதல் நாட்டில் பல்வேறு பிரதேசங்களுக்கு செய்திருந்தார். அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்தின் உலமா சபை மற்றும் அதனோடிணைந்த அமைப்புக்களுக்கும் கொரோனா நிவாரண நிதியத்துக்கான தனது பங்களிப்பைச் செய்திருந்ததுடன், தம்மால் இயன்றளவு பல உலருணவுப் பொதிகளையும் நிவாரணங்களையும் வழங்கியிருந்தார். தற்போதைய இக்கட்டான நிலையில் இவ்விடயங்களை பகிரங்கப்படுத்த கூடாது என முடிவு செய்திருந்தோம். எனினும், சமூக…

Read More