Headlines

மதில் விழுந்ததில் 16 மாணவர்கள் காயம்




லுணுகல முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று லுணுகல பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *