Headlines

பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம்!




நாட்டின் தென்பாகங்களிலும், மேல் மாகாணப் பிரதேசங்களிலும் மலையகங்களிலும் இன்று(21) பலமான காற்றுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேல் சப்ரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடமாகாணத்தில் சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் நிலவுகிறது எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *