Headlines

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமனம்

பத்து பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்டை பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், மொரட்டுவை, சப்ரகமுவ,ஊவா,வெல்லஸ்ஸ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள், கலைப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு புதிய நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வடமேல் மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read More

ප්‍රදීප් එක්නැලිගොඩ නඩුවේ ලුතිනන් කර්නල්ට ඇප

-නිලුපුලී – ප්‍රදීප් එක්නැලිගොඩ නඩුව සම්බන්ධයෙන් දෙවන සැකකරු ලෙසින්  සැකපිට රිමාන්ඩ් භාරයේ සිටි  ලුතිනන් කර්නල් ප්‍රබෝධ සිරිවර්ධන හෝමාගම මහේස්ත්‍රාත් රංග දිසානායකගේ නියෝගයකට අනුව  රුපියල් ලක්ෂ 20ක මුදල් ඇප හා රුපියල් ලක්ෂ 60 බැගින්වූ ශරීර ඇප දෙකක් මත මුදා හැරීමට නියම කර ඇත . ඔහුට සෑම ඉරුදිනකම අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ පෙනී සිටින ලෙසද නියෝග කැරුණු අතර…

Read More

கர்நாடகத்தில் பதட்டம் நீடிப்பு: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு

தமிழர்களுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் காரணமாக கர்நாடகத்தில் பதட்டம் நீடிக்கிறது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தின. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட்டு, காவிரியில் இருந்து தமிழ் நாட்டுக்கு 20-ந்தேதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும்…

Read More

2ஆம் வகுப்பில் பயணித்த 52 பேர் கைது

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைதுசெய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 3 ஆம் வகுப்புக்கான பயணச்சீட்டை பெற்றுகொண்டு 2ஆம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 210ரூபாவை தண்டமாக அறவிட்டுள்ளதாகவும் ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மருதானை- மாத்தறை மற்றும் பொல்ஹாவலை-கல்கிஸ்ஸ ஆகிய ரயில்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da’wa Centre – Qatar இடம் MIC Sports Club– Ummsaeed Time 05/10/2014 (காலை 9 இலிருந்து ) பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விஷேட விளையாட்டு நிகழ்ச்சிகள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் . جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،، Sri Lanka Dawa Centre Qatar – SLDC…

Read More

நவ்ஷாத் ஹாஜியிடமிருந்து ஒரு செய்தி

– ஊடகப் பிரிவு – 1997 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகரசபை உப தலைவராகவும், 2011 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகர சபை தேர்தலில் மக்களின் அதிகபடியான வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டு நகரசபை தலைவராக நியமிக்கப் பட்ட நான் இன்று உங்களுக்காக ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான UPFA வில் இன்று காலடி எடுத்து வைத்துள்ள எனக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் எந்த இன, மத மற்றும் மொழி பாகுபாடின்றி…

Read More

நாம் களமிறக்க போகும் பொது வேட்பாளர் அரசுக்கு அதிர்ச்சியாக அமைவார் – மங்கள சமரவீர

அரசாங்கத்தை வீழ்த்தக்கூடிய பலமான எதிரணியினை உருவாக்கும் நோக்கிலேயே எமது நடவடிக்கை அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் போது வேட்பாளர் யார் எனும் துரும்புச்சீட்டினை களத்தில் இறங்குவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். சோபித தேரரா? சந்திரிக்காவா? ரணிலா? என யாரும் குழம்பத் தேவையில்லை. வெகு விரைவில் விடை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்கட்சிகள் சிந்துத்துக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய அரசியல் பிரமுகர்கள்…

Read More

2 பேர் மரணம்; நால்வர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள்; அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…

Read More

மின் தடைக்கு, மின்னலே காரணம்

பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…

Read More