Headlines

ஆரையம்பதியில் சிறுத்தையின் உடலம்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள பெரிய சந்தைக்கு முன்பாக புதன்கிழமை (06) இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. இந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பதுடன்,  எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வனவளத் திணைக்களத்திடம் இந்தச் சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு தேடி இந்தச் சிறுத்தை நகருக்குள் வந்திருக்கலாம் எனவும்…

Read More

புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி வழக்கு

டெல்லியில் புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெள்ளைப் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் தவறி விழுந்த இளைஞரை, புலி தாக்கியதில் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது . இந்நிலையில், புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சத்தை  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி அவரது…

Read More

அமெரிக்காவின் மேலும் பல போர்க்கப்பல்கள் இலங்கை வரும்!

அமெரிக்க கடற்படையின் மேலும் பல கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்தார். அமெரிக்க -இலங்கை படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.இதன்…

Read More

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிபுணத்துவம் பெற்றவர்-விக்கிரமபாகு

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்த துறையில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஒருவர் என சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குறித்த விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார். குறித்த விசாரணைகள் முடிவில் பொருத்தமான தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே…

Read More

நடுவானில் பறந்த விமானத்தில் சண்டையிட்ட விமானப் பணிப்பெண்கள்

அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லி­ருந்து மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்­துக்கு பய­ணத்தை மேற்­கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றில் இரு விமானப் பணிப்­பெண்கள் ஒரு­வ­ருடன் ஒருவர் சண்­டையில் ஈடு­பட்­டதால் அந்த விமானம் திசை­மாற்­றப்­பட்டு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி விமானம் 37,000 அடி உய­ரத்தில் நடு­வானில் பறந்த வேளை அந்த விமா­னத்­தி­லி­ருந்த இரு பணிப்­பெண்­க­ளி­டையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டது. இந்­நி­லையில் அந்த இரு பணிப்­பெண்­களும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் கைமுஷ்­டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்­டை­யிட ஆரம்­பித்­துள்­ளனர்….

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து ஜாதிக ஹெல உறுமய வெளியேறுவதால் அரசாங்கம் பலவீனமடையாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் அந்தக் கட்சிகள் விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது. அதிலுள்ள…

Read More

அதிபரின் தாக்குதலில் மாணவர்கள் படுகாயம்

கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் பாடசாலை அதிபர் ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. மேலதிக விசாரணைகளை உடுகம்பொல பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Read More

புற்றுநோய் வைத்தியசாலை பணிகளை துரிதமாக்க உத்தரவு!

கண்டி வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புற்றுநோய் வைத்தியசாலையின் பணிகளை துரிதமாக முடிக்குமாறு சுகாதார அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன மல்வத்து திபட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரரை சந்திக்க சென்ற வேளையில் குறித்த புற்று நோய் வைத்தியசாலையின் பணிகள் தாமதமாக முன்னெக்கப்படுகின்றமை தொடர்பில் அமைச்சரிடம் தேரர் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் கண்டி வைத்தியசாலைக்கு சென்று அங்கு இடம்பெற்று வரும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டுள்ளதுடன், இதன் நிர்மான பணிகளை முன்னெடுத்து…

Read More

ஆண் பாதுகாவலர் இன்றி வரவேண்டாம் – சவூதி அரேபியாவின் எச்சரிக்கை..!

புனித ஹஜ் கடமைக்காக சட்டபூர்வ ஆண் பாதுகாவலர் இன்றி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களை அழைத்துவரும் விமான சேவைகள் மீது சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் (17,35000 ரூபா) அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ஆண் பாதுகாவலர் இன்றிவரும் யாத்திரிகர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம்…

Read More