Headlines

மன்னார் மாவட்டத்தில் எட்டு மணித்தியாலம் நீர் விநியோகத் தடை!




மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் (30) எட்டு மணித்தியால நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது.

மன்னார் நீர் விநியோக வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் முருங்கன் நீர் விநியோக மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும், முருங்கன் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *