Headlines

ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணம்

ஜேர்மனிக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துகொண்ட ஜனாதிபதி இன்று ஆஸ்த்திரியா நோக்கி பயணமாகவுள்ளார். இவ்விஜயத்தின் போது ஆஸ்த்திரியா ஜனாதிபதி ஹெய்ன் பிஷ்கர் உட்பட முன்னணி அரச பிரதிநிதிகளையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார். சிறந்த சமூக, சந்தைப் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆஸ்த்திரியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடன் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“சவால் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் அதிகரித்த பிரதிநிதித்துவமே நன்மை பயக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

காலாகாலமாக அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்தவர்கள், வென்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கியதை தவிர வேறு எந்த உரிமையையும் இம்மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல வேட்பாளர் வை.கே.றஹ்மான் தலைமையில், மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலாவதாக களமிறங்கியபோது, குறிப்பிட்ட வாக்குகளை அளித்து மக்கள் எங்களுக்கு ஆதரவினை வழங்கினர். ஆனால், கடந்த முறை…

Read More

இலங்கையை கைப்பற்ற ISIS திட்டம் -BBC

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த  அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில…

Read More

இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும் – முன்னணி சோசலிச கட்சி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது. ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி, மாவோவத கம்யூனிஸ்ட் கட்சி, பராக்ஸிக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின்…

Read More

இலங்கை மீனவர்கள் 1205 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 1205 பேர் இந்திய கடற்படையினரினால் கடந்த ஐந்து வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், 241 படகுகள்  கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய மீனவர்கள் 2391 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர கடற்படை தலைமை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். நாளைய தினம் குறித்த கடற்படை அதிகாரி சத்ய…

Read More

அவசர அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று -28- வியாழக்கிழமை  ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யுவதிகளின் தொழில் முயற்சிக்கு கரம் கொடுத்த ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட. பணங்கட்டுக்கொட்டு கிராம யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் ரெஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நஹுசீன், உவைசுல் ஹர்ணி, வடிவுக்கரசி, டிலானி…

Read More

கம்ப்யூட்டரில் விளையாட தந்தை கிரெடிட் கார்டில் பணம் எடுத்த 5 வயது சிறுவன்

இங்கிலாந்தில் நோர்த்தாம்டன் சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத். இவர் ‘பேஸ்புக்’ இணைய தளத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்திருந்தார். விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அதை அவர் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவரது 5 வயது மகன் அலெக்சாண்டர் தனது தந்தையின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ விளையாடிக்கொண்டிருந்தான். அந்த விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. அதற்கு அவனிடம் பணம் இல்லை. உடனே தனது…

Read More

சுகாதார வாரமும் இரத்ததான முகாமும் 2014

“இரத்தம் வழங்கி உயிரைப் பாதுகாத்தல்” (Give Blood Save Life) என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோஷமாக மட்டுமன்றி, அதனை ஒட்டியதாக இரத்ததானம் எனும் உயிர்காக்கும் செயற்றிட்டம் உலகெங்கும் அரசாங்கங்களாலும் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது. ஜூன் 14ஆம் திகதி சர்வதேச இரத்தான தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், விபத்துக்கள், குருதி தொடர்பான நோய்கள் முதலானவை இரத்த தானத்தை அதிகம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களாகும். இச்சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கானோரை சாவின்…

Read More

முகத்தைக் கடித்ததாலேயே சேயாவைக் கொன்றேன்! கொண்டயாவின் அண்ணன் வாக்குமூலம்

துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக கொண்டயாவின் அண்ணன் தெரிவித்துள்ளார். கொட்டதெனியாவ சிறுமி சேயா சந்தெவ்மியின் படுகொலை தொடர்பில் தற்போது கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த, அவரது அண்ணன் சமன் ஜயலத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் சேயாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் தலைமுடி என்பவற்றோடு சமன் ஜயலத்தின் டி.என்.ஏ. பொருந்துவதாக நேற்றுநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்றைய தினம் கொண்டயாவின் சகோதரர்…

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை, நீரல்லை கிளை அங்குரார்ப்பணம்!

கண்டி மாவட்டத்தின் அக்குரனை பிரதேச சபைக்குட்பட்ட நீரல்லை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  புதிய கிளை அங்குரார்ப்பண நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலும் கடந்த வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை கிளையின் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஜேபி உட்டப ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Read More

மங்கள சமரவீர – ஜேர்மனி அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர் ஸ்டென்மியர், இலங்கையில் மாற்றத்துக்கான காரணவாதி என்று மங்கள சமரவீரவை புகழ்ந்தார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.இதேவேளை தமது விஜயத்தின் போது மங்கள சமரவீர, ஜேர்மனின் புத்திஜீவிகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

Read More