Headlines

தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் நிறுவனத்தில் தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் ஆறிகாமம், தும்மலசூரிய யகம்வெல முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில்  நேற்று (21) இடம்பெற்றது.

 

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான என்.எம் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தசநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் விஷேட அதிதிகளாக குளியாப்பிடிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்,  உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *