Headlines

“சமூக ஆய்வாளர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருகின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

முஸ்லிம் சமூக ஆய்வாளரும், சிறந்த சிந்தனாவாதியும் பன்னூலாசிரியருமான பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் மறைவு ஆழ்ந்த கவலை தருதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுதாபம் வெளியிட்டுள்ளார். கல்வித்துறையிலும், சமூக ஆய்விலும் அன்னாரது அனுபவங்களின் பங்களிப்பு அபரிமிதமானது. எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ஹஸ்புல்லாஹ், மன்னார் மண்ணுக்கு பெருமை தேடித் தந்த ஒரு கல்விமான். இவர் பன்முக ஆளுமை படைத்தவர். 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது “வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு” ஒன்றை தொடங்குவதில் முக்கிய காரண…

Read More

கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது…

Read More

அமெரிக்காவில் சர்ச் கட்ட நிதியுதவி செய்த முஸ்லிம்கள்!

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் வெள்ளையின மக்களுக்கும் கருப்பின மக்களுக்கும் இன மோதல் வெடித்ததை நாம் படித்திருக்கலாம். பல உயிர்கள் இதில் பலியாயின. அதோடு வெள்ளையின குண்டர்கள் எட்டுக்கும் மேற்பட்ட கருப்பினத்தவருக்கு சொந்தமான சர்ச்களை எரித்து விட்டனர். இன்று வரை அது சரி செய்யப்படாமல் இருந்தது. இதனை கண்ணுற்ற மூன்று இஸ்லாமிய அமைப்புகள் சர்ச்களை கட்டித்தர முடிவு செய்தன. அந்த அமைப்பின் பெயர்கள் முறையே Ummah Wide, Muslim Anti-Racism Collaborative and Arab American Association…

Read More

மக்கள் மத்தியில் குழப்பம்

நாட­ளா­விய ரீதியில் நள்­ளி­ரவு முதல் அமு­லுக்கு வரும் வகையில் மின்துண்­டிப்பு அமுல்­ப­டுத்­தப்­படும் என இலங்கை மின்­சார சபை­யினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அதனை சில மணி­நே­ரங்­களில் மின் வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க அமைச்சு நிரா­க­ரித்­தது. இதனால் நேற்று மாலை நாட்டு மக்­க­ளி­டையே குழப்­ப­க­ர­மான நிலை ஏற்­பட்­டது. மின்­வெட்டு அமு­லா­குமா அமு­லுக்கு வராதா என்ற கேள்­வி­க­ளுடன் மக்கள் குழப்­பத்­துடன் காணப்­பட்­டனர். நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­க­ப்­பட்டு மின்­துண்­டிப்பு முன்­னெ­டுக்­கப்­படும் என நேற்று மாலை இலங்கை மின்­சார சபை­யினால் விஷேட மின் வெட்டு பட்­டியல்…

Read More

எதிர் வரும் தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் , இதனை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்க வேண்டும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க வேண்டும் . ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான முடிவுகளை வழங்குகிறது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்து அரவனைக்ககக் கூடிய எமது இருப்பை உறுதிபடுத்தக்கூடியவர்களுக்கு பின்னால்தான் நிற்க…

Read More

வரி வசூலில் அரசாங்கத்திற்கு வெற்றி!

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைப்புக்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் ரூபா 769.75 பில்லியன்இலாபம் பெறப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபா 625,867 பில்லியன் வருமானம் இந்த மூன்று அமைப்புக்கள் மூலம்கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான தொழிற்சாலைகள் மூலமும் வருவாய் அதிகரித்து வருவதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், தடங்கள் இல்லை

எவன்காட் நிறுவனத்தின் நடவடிக்கைகளில், கடற்படையினர் தலையிட்டமையினால் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளில் எந்தவித தடங்களும் இல்லை என்று கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது, அதன் தலைவர் பீ.ஐ. அப்டின் தெரிவித்தார்.

Read More

தேர்தலை நடத்த தயார் : மஹிந்த தேசபிரிய

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு தாம் தயார்நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி சபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சரினால் தமக்கு வழங்கப்படும் வரை தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் ஆணைக்குழுவினரால் தேர்தல் பிற்போடவில்லை எனவும் அவர் மேலும், தெரிவித்தார். கம்பளை நகரில் இடம்பெற்ற பேரணி நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

Read More

ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

மஹிந்த நாட்டைவிட்டு வெளியேறியமைக்கான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்தின் சில பௌத்த மதஸ்தானங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே தாய்லாந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும்,சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குதீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை அல்லதுமுஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸும், தமிழ்த் தேசியகூட்டமைப்பின்…

Read More

11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை.!

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது. அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில்…

Read More