Headlines

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளமைக்கும் முயற்சிக்கு கூட்டமைப்பே தடை! அமைச்சர் ரிஷாட்…




காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள நிர்மாணிப்பதற்காக தான் எடுத்த முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கைத்தொழில், வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (29)  இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு பதிலளித்தார்.

நல்லாட்சி அரசு அமைந்ததன் பின்னர் வடக்கில் எத்தனை கைத்தொழிற்சாலைகள் அமைத்தீர்கள் எனவும்,  வடக்கிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மற்றும் ஏனைய தொழிற்சாலைகளையாவது   மீள அமைத்தீர்களா? என சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.  கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள அமைப்பதற்கான ஆதரவு, ஆலோசனைகளை நான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரிடம் கேட்டேன். ஏனைய வடக்கு மாகாண அரசியல்வாதிகளிடமும் கேட்டேன். ஆனால், யாருமே எனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதில் பல சிக்கல்கள் இருப்பதாகக் கூறினார்கள். எனவே என்மீது பழிபோடாதீர்கள் என அமைச்சர் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *