Headlines

කොස්ගම  වැසියෝ අදත් උද්ගෝෂණයේ –  ගමනා ගමනය අඩාලයි 

– නිලුපුලී – සිය ඉල්ලීම්වලට බලධාරීන් අවධානය යොමු නොකරන බව සඳහන් කරන සාලාව විරෝධතාකරුවන් යළිත් අද දිනද (එනම් ජූනි 9)  හයිලෙවල් මාර්ගය  අවහිර කරමීන් විරෝධතාවයක් ආරම්භ කර ඇති බව වාර්තා වේ.  මෙම හේතුවෙන් කොස්ගම  ප්‍රදේශයේ හයිලෙවල් මාර්ගයෙහි ගමන් ගන්නා වාහන  යළි සීමා කිරීමට සිදු වු බව පොලීසිය පවසයි.

Read More

பாரம்பரியத் தொண்டுப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் சிரமதானம்!

(அப்துல்லாஹ்) தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ். சாந்தா தெரிவித்தார். இன்று (28) வியாழக்கிழமை உப்புவெளி கிராம சேவையாளர் அலுவலகமும் அதன் சுற்றாடலும் கிராம மாதர் சங்க உறுப்பினர்களால் சிரமதானம் துப்புரவு செய்யப்பட்டது. உப்புவெளி கிராம சேவகர் பிரிவிலடங்கும் செம்பியன் தோட்டம், சோலையடி மற்றும் அலஸ் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள் இன்றைய சிரமதானத்தில் பங்கேற்றனர்….

Read More

விமானப்படை நூதனசாலை: இன்று பொதுமக்கள் பார்வைக்கு

இலங்கை விமானப் படையின் 65வது வருட நிறைவு தினத்தையொட்டி, இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலையை பொதுமக்கள் இன்று இலவசமாக பார்வையிட முடியும் என விமானப்படைப் பிரிவு தெரிவித்துள்ளது. விமானப்படையின் 65வது நிறைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் இரத்த தானம் வழங்கல், இலவச சுகாதார சேவைகள், கல்விச் சேவைகள், கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த  செல்வந்தர் !

சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர். சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார். இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank, Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார். துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல்…

Read More

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்வாதிகளே தேவை – பா.உ. நவவி

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் சொகுசாக இல்லாமல் மக்கள் பிரச்சினைகளை கேட்டு தீர்க்கும் அரசியல்வாதிகளே இன்றைய தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி தெரிவித்துள்ளார்.

Read More

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா நிகழ்வு கடந்த  30.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் சம்மூன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் தெளபீக் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழு தலைவர் மன்சூர் ஆதம்பாவா , மற்றும் ஊர்பிரமுகர்களும்…

Read More

தேஸ்ரன் கல்லூரி நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நண்பன் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் – பரபர வீடியோ

அதிவேகமாக விரைந்து செல்லும் வாகனங்களால் சாலை விபத்துகள் பெருகிவரும் சவுதி அரேபியாவில் நண்பன் ஓட்டிவந்த கார் மோதி பல அடி தூரத்துக்கு பள்ளி மாணவன் தூக்கி வீசப்படும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சவுதியின் தெற்கேயுள்ள ஜஸான் மாகாணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில், அங்குள்ள மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும் அந்த மாணவன் சாலையை கடக்கும்போது, அவ்வழியாக வேகமாக காரை ஓட்டிவரும் அவனது நண்பன் காரை அவன்மீது மோதிவிடுகிறது. அடிபட்ட வேகத்தில் மாணவன் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு,…

Read More

கைத்துப்பாக்கியுடன் செல்பி எடுத்த பெண்ணின் நெற்றியில் குண்டு பாய்ந்தது

கைத்துப்பாக்கியுடன் செல்பி புகைப்படம் எடுத்த ரஷ்ய பெண்ணின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் வெரோனிகா (21). செல்பி பிரியரான அவர் விதவித மான கோணங்களில் செல்பி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் பாதுகாவலர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்த வெரோனியா அதனுடன் செல்பி புகைப்படம் எடுத்தார். அப்போது அவரது விரல் தவறுதலாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியது. இதில் அவரது…

Read More

ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு

– இக்பால் அலி – துருக்கி நாட்டு பிரதமர் அலுவலகத்தின் கலாசார விவகார தலைமை அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஆசியா மற்றும் பசுபிக் உலக நாடுகளின் முஸ்லிம் தலைவர்களுக்கான மாநாடு 13 ஆம் திகதி முதல் 16 வரை துருக்கி இஸ்தாம்பூல் நகரில் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து விஜயம் செய்து முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் மற்றும் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் எம். எச். ஏ. பாஹீம் ஆகியோர்கள் கலந்து…

Read More

நீதிபதியின் அதிரடி உத்தரவு: நாமல் அதிர்ச்சி!

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த எச்சரிக்கையின் மத்தியில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தவறான முறையில் பெற்றுக் கொண்ட 45 மில்லியன் பணத்தை தனது இரண்டு நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்த சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றில் நாமலை ஆஜர்படுத்திய வேளை, பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு வழங்கியிருந்தார். இதன்போது நீதிமன்ற…

Read More

பொதுபலசேனா தப்பியோட்டம்!

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின் அலுவலகம் எனப் பெயரிடப்பட்டிருந்த விளம்பரப் பலகை இன்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த வீடு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிஸ்கால் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது பலவந்தமாக திடீரென அவ்விடத்தில் பொது பலசேன அமைப்பின் மாவட்டக் காரியலம் கடந்த ஒரு வருடத்திற்கு காலத்துக்கும் மேலாக செயற்பட்டது என்பது…

Read More