Headlines

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்




மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ள நன்கொடைகள் குறித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சிபிஐ உள்ளிட்ட எந்தவிதமான விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார் அவர்.

அதோடு பாஜக தோல்வி பயத்தால் தமது கட்சி மீது இப்படி அபாண்டமாகப் பழி சுமத்தி வருகிறது என்றும், அர்விந்த் கெஜ்ரிவால் கூறி வரும் நிலையில், ஆம் ஆத்மிக் கட்சிக்கு சமாஜ்வாதிக் கட்சி ஆதரவு தெரிவிப்பது போல ஆம் ஆத்மியின் புகழைக் கெடுக்கவும் தோல்வி பயத்தின் காரணமாகவும்தான் பாஜக இப்படி வதந்தியைப் பரப்பி வருகிறது என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *