Headlines

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து…

Read More

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் ரிசாத்

  நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அழைப்பிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பாடசாலைக்கு கடந்த 08.07.2018 அன்று விஜயம் செய்தார். இதன்போது பாடசாலையின் முகப்பு, நுழைவாயில் மற்றும் மூன்றுமாடிக் கட்டிடங்கள் நிர்மானிப்பது தொடர்பாகவும் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஜாபீர் மற்றும் பழைய மாணவர்களோடு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களை நிந்தவூர் பிரதேச சபையின்…

Read More

நாமலுக்கு எதிரான விசாரணைகள் பூர்த்தி

கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Read More

சர்வதேச விசாரணை நிறைவு- இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்குமா?

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும். எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் மனித உரிமைகள் பேரவை இறுதித்…

Read More

சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி யை பயன்படுத்துவதன் மூலம்  ஏற்றுமதியினை  மேலும் விரிவுபடுத்த முடியும்!- அமைச்சர் ரிஷாட்

சுவிட்ஸர்லாந்தின் ஜிஎஸ்பி வரிசலுகையை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஏற்றுமதியையும் மொத்த இருதரப்பு வர்த்தகத்தினையும் அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் ஹின்ஸ் வாக்கர்-நெட்கரோன் தெரிவித்தார்.  கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான  சந்திப்பொன்றின் போதே அவர்  இதனை தெரிவித்தார். சுவிட்சர்லாந்து தூதுவர்  மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்: இலங்கை – சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஒரு வலுவான குறுகிய கால…

Read More

ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று 65வது பிறந்த தினம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் குடியேற்றத்திட்டத்தின் ஊடாக அவரது குடும்பத்துக்குக் காணித்துண்டொன்று கிடைத்த நிலையில், சிறு வயதிலேயே பொலன்னறுவைக்கு இடம்பெயர்ந்திருந்தார். சிறு வயதில் கம்யூனிச சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மைத்திரிபால சிறிசேன தனது 17வது வயதில் சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து…

Read More

நான் செய்த, மிகப்பெரும் தவறு

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டமையே தான் செய்த பெரிய தவறென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கவலை தெரிவித்துள்ளார். நேற்று -28-  கதிர்காமத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேபோல் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் கடமையாற்றும் போது, கடமையாற்ற முடியாத அமைச்சான மக்கள் தொடர்பாடல் அமைச்சை தனக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ருஹனு பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் நிதி…

Read More

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமான கொழும்பு வடக்கின் ரந்திய உயன, மெத்சந்த செவன மற்றும் மிஜய செவன தொடர்மாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸ் இன்று (29) வழங்கி வைத்தார். அத்துடன், எதிர்வரும் நாட்களில் “பாயிஸ் பவுன்டேஷன்” ஏற்பாட்டில், கொழும்பு வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

Read More

கண்டி மாவட்டத்தில் வேரூன்றும் மக்கள் காங்கிரஸ்! மயில் சின்னத்தில் தனியாக போட்டியிடவும் ஆலோசனை!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சிப் பணிகளை விரிவுபடுத்தியதனை அடுத்து, அந்த பிரதேசத்தில் உள்ள பல சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.காதரின் (கம்பளை காதர் ஹாஜியார்) மருமகன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர்களான நசார், உடையார், ஹனீபா ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,…

Read More

தென்னாபிரிக்கா பயணமாகிறது அரச உயர் குழு

இலங்கையில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையின் ஒரு அங்கமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராய இலங்கை அரசின்  உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், அமைக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவே அரசின் உயர் மட்டக்குழு அங்கு செல்லவுள்ளது. இலங்கையில் உருவாக்கப்படவுள்ள இந்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில், மதத் தலைவர் களைக் கொண்ட ஒரு…

Read More

இலங்கை அகதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி

திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த நிலையில் நேற்று 20 பேர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு…

Read More