Headlines

மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் மத்தியகுழு புனரமைப்புக் கூட்டம் இன்றைய தினம் (03) முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.S.சுபைர் தலைமையில் ஏறாவூரில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி, பிரதி செயலாளர் நாயகம் M.A.அன்சில், பிரதி தேசிய அமைப்பாளர் M.A.M.தாஹிர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முசலி விவகாரத்தினால் எழுந்துள்ள முரண்பாடு தொடர்பில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார். இது…

Read More

அமைச்சர் சஜித் பிரேமதாச வின் அரசியல் முன்மாதிரி

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவன்ச மற்றும் பேரியல் ;அஸ்ரப் மற்றும் காலம் சென்ற அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப் ஆகியோர்கள் கபினட் அமைச்சர்களாக பதவி வகித்தபோது வாழ்ந்த கொழும்பு 7 ஸ்டோமோ கிரசன்ட் வீதியில் உள்ள வாசஸ்தலத்தை இன்று வீடமைப்பு சமுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ் வீட்டை மீள அமைச்சின் செயலாளாருக்கு பொறுப்பளித்தார். இவ் வீட்டுகாக பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து கடந்த காலத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச அழகுபடுத்தியுள்ளார்….

Read More

துபாய் நகரில் இன்று திடீரென வீசிய புழுதிக் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிப்பு

சாலைகளில் நடந்து சென்றவர்கள் புழுதியிலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மறைத்த படி சென்றனர். புழுதி காற்று வீசுவது சில நாட்கள் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த புழுதி மணல் காற்று வீசுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நண்பர்கள் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள். கடந்த மூன்று நாட்களாக பனி மூட்டம் கடுமையா இருந்தது. காலநிலையும் அருமையா இருந்தது. இன்று காலையிலேர்ந்து பனிக்கு பதிலா புழுதிப்புயல் வீசுது! 100மீ தூரத்துக்கும் மேல எதையும் தெளிவா பார்க்க…

Read More

சிகிச்சைக்கு பின் குணமடைந்த ஹிலாரி கிளிண்டன்

நிமோனியா காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்த ஹிலாரி கிளிண்டன் நாளை வடக்கு கரோலினா மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். இவர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நியூயார்க்கில் வர்த்தக மையம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நினைவு தினம் கடந்த…

Read More

கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…

Read More

தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சர் றிஷாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் – அஸ்கர் ரூமி

பாறுக் சிகான் அமைச்சர் றிஷாத் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் தரப்பு தங்களை பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பல தரப்பால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பாக செய்திகள் தெரிவிக்கின்றனவே என கேட்டவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது கருத்தில் அமைச்சர் இன்று ஒரு தேசிய தலைவனாக மக்கள் மத்தியில் திகழ்கின்றார்.இவரை வீழ்த்த பலரும் நினைக்கின்றனர்.இது குறித்து பகல்…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை!

கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை: 8 பேருக்கு விளக்கமறியல்

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு நேற்று இரவு காலச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்த எக்கநாயக்க தலைமையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வை அரச கலாச்சாரத் திணைக்களம் இவ்வருட விருது வழங்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் உள்ள 10 தொலைக்காட்சிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரம்ஙகள், சிறந்த நடிகை, நடிகர், சிறந்த நிகழ்ச்சிகள் சிறந்த செய்தி வாசிப்பவர்கள். சிறுவர் நிகழ்ச்சிகள்…

Read More

அமெரிக்கவின் தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர் காயம்

அமெரிக்க குண்டு வீச்சில் ஐ.எஸ். தலைவர் பக்தாதி காயம் அடைந்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கில் மேற்கு இன்பர் மாகாணத்தில் குயாயிம் நகரில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசின….

Read More

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு…

Read More