Headlines

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ் பெருநாள் தொழுகை

(அஸ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஹஜ்பெருநாள் தொழுகை மருதானை ஆனந்தாக் கல்லூரி அருகில் உள்ள வைட்பார்க் மைதாணத்தில் இன்று(6) காலை 07.00 மணிக்கு நடைபெற்றது. இப் பெருநாள் தொழுகையை டி.எஸ்.ஜ.என்  ரஸ்லான் மௌலவி அவர்களினால் நடாத்தப்பட்டது. மாளிகாவத்தை, மருதானை பிரதேசத்தின் வாழ் முஸ்லீம் ஆண்கள், பெண்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர்.

Read More

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர்

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கின்றனர். துர்நாற்றத்தால் அப்பகுதியை பாழடிக்கின்றனர். அவற்றில் இருந்து விமோசனம் பெற ஜெர்மனியில் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்குள்ள ஹாம்பிரிக் நகரில் செயிண்ட் பாலி இரவு விடுதி பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் சிறுநீர் கழித்து நாறடித்து வருகின்றனர். இதை தடுக்க விடுதி நிர்வாகம் தனது கட்டிட சுவர்களில் தண்ணீரை…

Read More

தேசிய அரசாங்கம்: மஹிந்தவின் யோசனை

தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையே என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஹங்கமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தேசிய அரசாங்கம் என்றொரு கருப்பொருளை ஒரு சிறந்த மனிதரே அறிமுகப்படுத்தினார். அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு முன்னரே இந்தக் கருப்பொருளை அறிமுகப்படுத்தி விட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

நிந்தவூர் பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸின் தாஹிர் தவிசாளராகவும், சுதந்திரக் கட்சி சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராகவும் ஏகமனதாகத் தெரிவு!

 -ஊடகப்பிரிவு- நிந்தவூர் பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று மாலை (27) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த அஸ்ரப் தாஹிர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை…

Read More

தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர் சமீர நிலங்க சமரசிங்க நேற்று தெரிவித்தார். இது குறித்த விபரங்களை திரட்டுவதற்காக நாடு முழுவதும் 200 குழுக்கள் நியமிக்கப்பட் டிருப்பதாவும் அவர் கூறினார். பெப்ரல் அமைப்பின் பிரகடனத்தின்படி வேட்பு மனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு நபரும் போதைக்பொருள் பாவனை, விற்பனை, விநியோகத்துடனான தொடர்பு, மதுபான விற்பனை நிலையம் மற்றும் எந்தனோல் இறக்குமதிக்கான…

Read More

மஹிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து?

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

Read More

கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டில் கடந்த செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல முயற்சித்த போதிலும், அந்த கடவுச்சீட்டில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஈகே 348 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு அவர் கடந்த செவ்வாய்கிழமை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அவரை செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் நேற்று சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More

தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த  செல்வந்தர் !

சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து கல்வி அறக்கட்டளைக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தானம் செய்த துபாய் செல்வந்தர். சவூதி அரேபியா இளவரசரை தொடர்ந்து, துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல் குரைர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அறக்கட்டளைக்கு தானம் செய்துள்ளார். இவர் துபாயில் பிரபலமாக அறியப்படும் Mashreq bank, Al Ghurair Construction, Al Ghurair RealEstate போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார். துபாய் செல்வந்தர் அப்துல்லாஹ் அஹ்மத் அல்…

Read More

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்ட 5 ஆம் கட்டம் குருநாகலில்!

‘போதைப்பொருள்  அற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்கு குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்குவதனூடாக சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய…

Read More

மன்மோகன் சிங் பாதுகாவலர் கன்னத்தில் ‘பளார்’ விட்ட பெண்!

இந்திய, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாவலரை, வெளிநாட்டுப் பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்திருந்தார். அப்போது நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர், அந்த பெண்ணை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட நபர்களையே அனுமதிக்க முடியும் என அவர் கூறி…

Read More

வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பிரதியமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவினை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளை இன்று(1.3.2017) புதன்கிழமை பிற்பகள் சந்தித்த போது அவர்களிடம் மேற்கண்டவாறு பிரதியமைச்சர் அமீர் அலி கூறினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய கோரிக்கை கடிதத்தினையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளிடம்…

Read More

இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது – பாராளுமன்றத்தில் ரணில்

மாலைத்தீவு தொடர்பில் இன்று (04) பாராளுமன்றத்தில் புதிய பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார். பாராளுமன்ற விவாதம்…  ரணில் விக்ரமசிங்க: முதற்தடவையாக மாலைத்தீவில் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அனுரகுமார திசாநாயக்க: இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக 99 இலட்சம் டொலர்களை, அதாவது 13,000 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. எனினும், எவ்வித விலைமனுக்கோரலும் இன்றியே இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க: இலங்கையின் ஒரு பகுதியாகவே மாலைத்தீவு கருதப்படுகிறது. அனுரகுமார திசாநாயக்க: எமது நாட்டில்…

Read More