“சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்” – முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தன்னை ஆதரித்து, ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், “வரவுள்ள பாராளுமன்றம் சுகமான பாராளுமன்றமாக இருக்கும் என்றெண்ணி, பாராளுமன்றம் செல்ல சிலர் ஆசைப்படுகின்றனர். அது சுமையான பாராளுமன்றம் என்பதை…
