Headlines

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..! தியாகத் திருநாளின் படிப்பினைகளில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இலக்குகள் வெற்றிகொள்ளப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறைதூதர் இப்றாஹிம் நபியின் தியாகத்தை, இறைவன் முழுச் சமூகத்திற்கும் மார்க்கமாக்கியுள்ளதாக இஸ்லாம் போதிக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு…

Read More

“சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

அரசியல் ரீதியாக பிரிந்திருந்ததனாலும் ஒற்றுமையீனத்தினாலுமே புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நமக்கு எட்டாக்கனியாகியதாகவும், இம்முறை எப்படியாவது அது கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அலி சப்ரி ரஹீம், ஆப்தீன் எஹியா, முஸம்மில் ஆகியோரை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று மாலை (30) நடைபெற்ற…

Read More

“இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி” – ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று மாலை (29) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலாவது இல்லாமல் செய்ய வேண்டுமென்று கடந்த காலங்களிலும் சூழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன….

Read More

“சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கியதாக பிழையான குற்றச்சாட்டு” – ஒரு வாரத்துக்குள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாவிட்டால், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மீது சட்ட நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும், இல்லையேல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில், இன்று மாலை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “சஹ்ரானுக்கும் அவருடன் இணைந்தவர்களின் தற்கொலைத் தாக்குதல்…

Read More

“அரசாங்கத்தின் காட்டமான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்” – கன்னி உரையில் பி.எம்.சிபான்!

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு, தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால், சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைமைத்துவம் என்ற அடிப்படையில், அரசாங்கத்தின் இவ்வாறான காட்டமான நடவடிக்கைகளை எதிர்த்து, குரல் கொடுக்கும் பணியில், இந்த சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினராகப் பதவியேற்ற பி.எம்.சிபான் தெரிவித்தார். கல்முனை…

Read More

“யாரினது கதைகளையும் கேட்கும் அரசியல்வாதி நானல்ல” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

யாரினது கதைகளையும் கேட்டு அரசியல் செய்யும் நோக்கம் எனக்கு ஒரு போதும் கிடையாது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சம்மான்கார குடும்ப தலைவர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான அமீர் அலிக்கும் இடையிலான சந்திப்பு, எம்.எம்.இர்ஸாத் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, “ “அமீர் அலி ஆட்களின் கதை கேட்கின்றார்” என்று தேர்தல்கள் வரும்போது ஒரு கதை…

Read More

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று (28) ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, வன்னி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு மொட்டுக் கட்சியினரின் தேர்தல் அடாவடித்தனங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை களமிறக்கியதால் வந்த வினையே இது….

Read More

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம்” – விசாரணையின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

“இன்னும் இருக்கும் நாட்களை சரிவரப் பயன்படுத்துவோம். நேரத்தையும் காலத்தையும் இனியும் நாம் வீணடிக்க முடியாது” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில், இன்று (27) இடம்பெற்ற ஐந்து மணிநேர விசாரணை முடிவடைந்த பின்னர், வவுனியாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “அரசியல் ரீதியில் எம்மை வீழ்த்துவதே பொது எதிரியின் நோக்கம். நமது கடமைகளை சரிவரச் செய்வதில் கவனம் செலுத்துவோம். தூரநோக்குடனும் பொதுநல சிந்தனையுடனும்…

Read More

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் ஊடகவியலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன்  என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது…

Read More

“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” – மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தற்போது சரிந்து போயுள்ள வாக்குகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்கான திட்டமுடனேயே, முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபடுத்தி, பலிக்கடாவாக்கும் முயற்சிகளில் கடும்போக்குவாதிகள் ஈடுபட்டு வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, நேற்று மாலை (25) மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது,    “நமது சமூகத்துக்கு…

Read More

‘கட்சி, சின்னங்கள், கோஷங்களுக்காக வாக்களித்த காலம் மாறிவிட்டது; மக்கள் சேவகர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள்’ – தோப்பூரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் இன்று (25) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவர் உரையாற்றினார். தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் கூறியதாவது,   மக்கள் காங்கிரஸின் மீது கொண்டுள்ள அபரிமிதமான…

Read More

சமூகத்தின் நிம்மதிக்கு சதா வழிகோலுவோம்!                   

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வடமாகாணம் முழுவதிலும் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள், வடமாகாணத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்கள். மாற்றுவதற்கு உடை கூட எடுக்க அனுமதிக்கப்படாமல் உடுத்த உடையோடு வயோதிபத் தாய்மார்களும், தந்தைமார்களும், கர்ப்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தை தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் உண்ண உணவின்றி, தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி வீதியோரங்களில் தலைசாய்த்து, களைப்பாறி, பாதங்கள் புண்ணாக நூற்றுக்கணக்கான மைல் தூரத்தை, கொடுவெயிலிலும் கும்மிருட்டிலும் தள்ளாடி தள்ளாடி நடந்த காட்சிகள் இன்னும் எம் நெஞ்சில் இளமையோடுதான் இருக்கின்றன….

Read More