“சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்” – சம்மாந்துறையில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தலில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மாஹிரை ஆதரித்து, சம்மாந்துறையில் (19) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ரிஷாட், “கடந்த பொதுத்…
