Headlines

அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துக

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதைத் தவிர்க்கு மாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48 மணிநேரத் துக்கு முன்னர் செய்யப்படும் இவ்வா றான பிரசாரங்கள் தேர்தல் சட்டங் களை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பா ளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்… எதிர் வரப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் பங்களிப்பு, முகம் கொடுக்க கூடிய பிரச்சினைகள் போன்றவை இச்சந்திப்பில் ஆராயப்பட்டன… இம்முறை தேர்தலில் புதிய பலத்தோடு அ.இ.மக்கள் காங்கிரஸ் நாத்தாண்டிய பிரதேசத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது…

Read More

தொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து

தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க அறிவித்துள்ளார். அரச சேவை தொழில் அதிகாரிகளின் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டத்தினால் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடுமுறை ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என…

Read More

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம். தம்புள்ளையில் அமைச்சர் றிஷாத்!!!

இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தம்புள்ளை வர்த்தகர்களுடன்  கலந்துரையாடலில் ஈடுபட்டார் . தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வர்த்தகர்கள், அமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன் இந்த சந்தர்ப்பங்களின் போது பொலிசார் ஓரவஞ்சனையுடன் செயற்பட்டதாக கவலை தெரிவித்தனர். அமைச்சர் இங்கு…

Read More

இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் சந்திக்கின்றார்.

இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி இரவு 7.45 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அரசியலைமைப்பு, தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

Read More

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்க கல்வி அமைச்சர் விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முன்தினம் (14) மேற்கொண்ட ஆர்ப்பாடத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அசாதாரண தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்துவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் நியாயமான தீர்ப்பு வழங்குமாறு கோரி முறையிடுவதாகவும் தேசிய…

Read More

ஜாதிக ஹெல உறுமயவுக்குள் வெடிக்கும் முரண்பாடு!

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் தொடர்பில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த கட்சியின் ஊடக பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஸாந்த ஸ்ரீ வர்ணசிஙக தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 19ஆம் திகதி மஹரகமவில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய நிலமைகள், ஜாதிக ஹெல…

Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை

விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் ஆலோ சனை வழங் கவா? அல்லது விசாரணை செய்யவா? அழைக்கப் படவேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உலகநாடுகளின் கடற்படை கலங்கள் வருவதற்கான அளவுகோலொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படை கலங்களும் இலங்கைக்கு வரலாம். எங்களை பொறுத்தவரை…

Read More

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும் பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதி திங்கட்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஜனாதிபதி எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தன்னை ஜனாதிபதி பதவியில்…

Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும்  முன்னரிமை வழங்கப்படும்.. விருப்பமுள்ள விண்ணப்பதாரிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சிசபை, தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிட்டு, தங்கள் சுயவிபரக் கோவையுடன் இரண்டு பரிந்துரையாளர்களுடன் விண்ணப்பங்களை  எதிர்வரும் 15.10.2016 ஆம் திகதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எஸ்.சுபைர்தீன் செயலாளர் நாயகம், அகில இலங்கை…

Read More

மு.கா வின் ஆரம்பகாலப் போராளி மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், முன்னாள் நகரசபை வேட்பாளருமான ஏ.ஜி.எம்.ஜபருள்ளாஹ் (நாசர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சுமார் 25 வருடங்கள் இணைந்து செயற்பட்டுள்ளேன். மு.கா தலைவரினால் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நீரில் எழுதப்படும் பொய்யான வாக்குறுதிகளாகவே இருக்கின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் மக்களை ஏமாற்றி, எமது ஆதரவாளர்களின் வாக்குகளை மு.காவுக்கு வழங்கத் தயார் இல்லை என்றும் கூறினார்….

Read More

பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் காங்கிரஸ் முடிவு!

-ஊடகப்பிரிவு- பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. இன்று இரவு (03)கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம், சுமார் 4 மணி நேரம் இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது. இதற்கு முன்னதாக இன்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய போது, சிறுபான்மை மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கி வரும்…

Read More