Headlines

“தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “புத்தளம் தேர்தல் தொகுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் சுமார் 70% வாழ்ந்து வருகின்றனர். அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் தமிழ்,…

Read More

“அம்பாறை மாவட்டத்தில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை, மக்கள் காங்கிரஸ் உடைத்தெறிந்துள்ளது” – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று (30) பொத்துவிலில் இடம்பெற்ற வெற்றிப் பெருவிழாவில் பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி…

Read More

பொத்துவிலில் வெற்றிப் பேரணி..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, நேற்று (30) அம்பாறையில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், முஷாரப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.  

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் – புத்தளம் –

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளம் மாவட்டத்தின் சவரான, மைக்குளம், சிலாபம், வட்டக்களி, சங்குத்தட்டான், ஜயபிம பகுதிகளில் நேற்று (29) நடைபெற்ற நிகழ்வுகளில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

“தேசப்பற்றை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்னேற்றலாம்” – கன்னி உரையில் முஷாரப் எம்.பி!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை… (27. 08. 2020)  கௌரவ சபாநாயகர் அவர்களே! பாராளுமன்றத்தில் எனது முதல் பங்களிப்பை வழங்க அழைக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அடக்கமும் கொள்கின்றேன். முதலில், சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட உங்களை வாழ்த்த விரும்புகிறேன், இந்த பாராளுமன்றத்தில் உங்கள் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன். இந்த உயரிய பாராளுமன்றத்திற்கான எனது பயணம் எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனாலும், இந்தப் பயணம், வெற்றியை நோக்கி நன்கு சித்தரிக்கப்பட்ட மனச்சித்திரம் கொண்டு…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் சார்பில், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள், இன்று (29) தும்மோதர, மனிங்கள, காக்கவத்த, மாதம்பை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன. குறித்த நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் உட்பட முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பாலர் பாடசாலை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் இன்று (29) பார்வையிட்டனர்.

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொட்டறாமுல்லையில்..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, கொட்டறாமுல்லை பிரதேசத்தில் இன்று (29) நடைபெற்றது. இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More

“அறுவைக்காட்டு பிரச்சினைக்கு ஜனாதிபதி நல்ல தீர்வைப் பெற்றுத் தருவாரென பெரிதும் நம்புகின்றோம்” – பாராளுமன்றில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

இடைக்கால கணக்கறிக்கையினை பிரதமர் நேற்று இந்த சபையில் சமர்ப்பித்ததன் பின்னர், இன்றைய தினத்தில் நான் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி  திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் தடைப்பட்டுள்ள நிலையில், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்டமும் இதற்குள் உள்ளடங்கியுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று (28) உரையாற்றிய அவர் கூறியதாவது, புத்தளம் மாவட்டம்…

Read More

முன்னாள் தவிசாளர் நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை; – மக்கள் காங்கிரஸினால் மூவரடங்கிய குழு நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் (26) கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத் ஆகியோர், இந்த ஒழுக்காற்று விசாரணைக் குழுவில் இடம்பெறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட…

Read More

நிந்தவூர் பிரதேச சபையில் விடைபெற்ற மூன்று உறுப்பினர்கள்!

நிந்தவூர் பிரதேச சபையின், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் கட்சியினதும் நிந்தவூர் மத்திய குழுவினதும் தீர்மானத்திற்கமைவாக, முன்மாதிரியான முறையில், ஏனைய வேட்பாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில், தமது உறுப்பினர் பதவிகளை இராஜினாமாச் செய்து விடைபெற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.மஜீத், எம்.எம்.சம்சுதீன், ஏ.றிபானா ஆகிய மூவருமே, நேற்று (25) நடைபெற்ற சபை அமர்வின் போது, தமது இராஜினாமா குறித்த தகவலைத் தெரிவித்து, சக உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர். தமது…

Read More

“சிறுபான்மை சமூக விவகாரங்களில் அரசு மென்போக்கை கடைபிடிக்க வேண்டும்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

முஸ்லிம்களின்  ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த வேண்டும் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார். ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையினை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது கடும்போக்குத் தன்மையினை…

Read More