Headlines

சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு

அஸ்ரப் ஏ சமத் வடக்கு கிழக்கு மலையகம் உள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாக பங்கீட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டும். என புதிய அமைச்சா் சஜித் பிரேமதாச கண்டிப்பான உத்தரவு. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 24 மாவட்ட முகாமையாளா்கள், சமுா்த்தி அதிகார சபைகளின் சகல முகாமையாளா்களையும் நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனா். எனது அமைச்சின் கீழ் வருகின்ற எந்தவொரு…

Read More

அரசாங்கத்தை மாற்றும் சக்தி, எங்களுக்கு உள்ளது – SLTJ

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளயிட்ட சிங்கள மொழி குர்ஆன் வெளியீடு நேற்று (8) கொழும்பில் நடைபெற்றது இதன்போது  உரையாற்றிய  செயலாளா் அப்துல ராசிக் – இந்த இயக்கத்துக்கு  எதிராக நல்லாட்சி அரசாங்கம்  செயல்பட்டால் இந்த ஆட்சியை கூட மாற்றம் அளவுக்கு எங்களுக்கு சக்தியுள்ளது. நாங்கள் ஒருபோதும் அரசியலுக்குச் செல்லும் இயக்கம் அல்ல, இந்த க் குர் ஆணை இணையத்தளத்தில் டபிள்யு.டபிள்யு. ”சத்தியோதய கொம்” என்ற ”சிங்கள குர்ஆண். கொம்” என்ற வெப்தளங்களில் சிங்கள மொழி உபயோகத்தினா் அறிந்து கொள்ளமுடியும் அடுத்த…

Read More

கலிபோர்னியாவில் புதிய சட்டம் : ஆண் பெண் இருபாலரும் ஒரே கழிவறை

அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

Read More

சஜின் வாஸினால், கிறிஸ் நோனீஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது…!

இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரிட்டன் தூதுவர் பதவவிலகியதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து தெளிவுபடுத்தப்படுதல் அவசியம். ஏனெனில் இது இலங்கையின் சர்வதேச உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயம். அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்த வி;டயங்கள் இந்த விடயத்தில் குழப்பம் நிலவுவதை புலப்படுத்தியுள்ளன. மிகத்…

Read More

கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்,ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து  4,080 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

டி.வி. தொடரில் பணிபுரியும் அதிபர் ஒபாமா மகள்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது. அதில் அவர் கதை வசனம் மற்றும் டைரக்ஷன் துறையில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முடிவடைகிறது. அதன் பிறகு டி.வி. அல்லது சினிமா துறையில் நுழைய மலியா முடிவு செய்துள்ளார். அதிபர் மகள் என்பதால்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பொதுஹெர கிராமிய குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் பொதுஹெர வட்டார வேட்பாளர் ரஜாப்தீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. எனவே…

Read More

வருமானத்தை அதிகரிப்பது அவசியம் – துமிந்த

மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, வட்வரி திருத்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் துமிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சுனாமி நிவாரண மோசடி – டிரான் அலஸ் வௌிநாடு செல்லத் தடை!

கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி ´ராதா´ என்ற நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சம்பவம் வருமாறு, கடந்த சுனாமி அவல காலத்தில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவென கூறி அப்போதைய ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதி பெற்று ´ராதா´ என்ற நிறுவனம் 2006இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன தலைவராக டிரான் அலஸ் செயற்பட்டுள்ளார்….

Read More

டொம் மாலினோவஸ்கி விரைவில் இலங்கை வருகை

ஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர்  டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இலங்கையின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு சிவில் சுமூகத்தினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளின் போது நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் அதேவேளை இந்த செயற்பாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

“இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?”

“இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?” என்ற கருப்பொருளில் செயலமர்வு ஒன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வணிகத்திணைக்களத்தினால் இன்று (27) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். இந்த செயலமர்வுக்கான ஒத்துழைப்பை பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் மையம் வழங்கியுள்ளது.

Read More

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

Read More