Headlines

தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்




அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும் புதிய தேர்தல் முறைமைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *